பனையூரில் பிரியாணி விருந்து... சைலண்டாக விஜய்யை சந்தித்த துணிவு இயக்குநர் ஹெச் வினோத்?

சென்னை: விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
அதேபோல், அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் ரேஸில் வாரிசுக்கு எதிராக களமிறங்குகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய்யுடன் துணிவு இயக்குநர் ஹெச் வினோத் சந்திப்பு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பரபரக்கும் பொங்கல் ரிலீஸ்

பரபரக்கும் பொங்கல் ரிலீஸ்

வரும் பொங்கல் பண்டிகை சினிமா ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா விருந்து கொடுக்கவுள்ளது. விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு இரண்டுமே பொங்கல் ரேஸில் களமிறங்கவுள்ளன. இதனால், விஜய், அஜித் ரசிகர்கள் இடையே இப்போதே பரபரப்பான சூழல் காணப்படுகிறது. அஜித் வழக்கம் போல எவ்வித ப்ரோமோஷனும் நடத்தாமல், ரசிகர்களையும் சந்திக்காமல் சைலண்டாக இருந்து வருகிறார். ஆனால், விஜய் வாரிசு படத்தின் வெற்றிக்காக அடுத்தடுத்து தனது ரசிகர்களை சந்தித்து உரையாடி வருகிறார்.

பனையூரில் பிரியாணி விருந்து

பனையூரில் பிரியாணி விருந்து

பனையூரில் உள்ள தனது மக்கள் இயக்கம் அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்த விஜய், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு பிரியாணி விருந்தும் கொடுத்து கவனித்து அனுப்பியுள்ளார். இதனால், வாரிசு திரைப்படம் பொங்கல் ரேஸில் கல்லா கட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வாரிசு படத்தைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கும் தளபதி 67ல் நடிக்கவுள்ளார் விஜய். இந்தப் படம் குறித்த அபிஸியல் அப்டேட் வாரிசு ரிலீஸுக்குப் பின்னர் ஜனவரி இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சைலண்டாக நடந்த மீட்டிங்

சைலண்டாக நடந்த மீட்டிங்

இந்த பரபரப்புக்கு நடுவே விஜய்யை துணிவு படத்தின் இயக்குநர் ஹெச் வினோத் நேரில் சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. சதுரங்க வேட்டை படம் மூலம் அறிமுகமான ஹெச் வினோத், தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, இப்போது துணிவு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக அவர் இயக்கிய கடைசி மூன்று படங்களிலும் அஜித் தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. துணிவை தொடர்ந்து யோகி பாபு நடிக்கும் சின்ன பட்ஜெட் படம், கமல் நடிப்பில் ஒரு படம் ஆகியவற்றை ஹெச் வினோத் இயக்கவுள்ளாராம். அதன் பின்னர் அவர் விஜய்யை இயக்க திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் ஓக்கே சொல்வாரா?

விஜய் ஓக்கே சொல்வாரா?

ஹெச் வினோத் தற்போது இயக்கியுள்ள துணிவு படத்தில் முழுக்க முழுக்க அவரது மேக்கிங் ஸ்டைலில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதேமாதிரியான ஒரு கதையை விஜய்க்கு கூறியுள்ளாராம் ஹெச் வினோத். இந்த சந்திப்பு குறித்து இதுவரை ஹெச் வினோத் - விஜய் இருதரப்பில் இருந்தும் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அதேநேரம் ஹெச் வினோத்தின் கதையில் நடிக்க விஜய் விரைவில் ஓக்கே சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இந்தக் கூட்டணி உறுதியானால் இது 2024 அல்லது 2025ல் தொடங்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

விஜய்யின் லைன் அப்

விஜய்யின் லைன் அப்

தளபதி 67ல் நடிக்கவுள்ள விஜய், அடுத்து அட்லீ, பிரதீப் ரங்கநாதன் ஆகியோருடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் தற்போது ஹெச் வினோத்தும் இந்த வரிசையில் காத்திருப்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக அஜித்தின் படங்களை இயக்கி வந்த ஹெச் வினோத், விஜய்யுடன் முதன்முறையாக இணையவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X