Just In
- 46 min ago
மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்!
- 1 hr ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
- 1 hr ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 2 hrs ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
Don't Miss!
- Finance
மாருதி சுசூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..!
- Sports
நடுவர்களின் பாரபட்சம்.. எல்லா பக்கமும் சுற்றி வளைக்கும் ஆஸ்திரேலிய அணி.. களத்தில் ஏற்பட்ட சர்ச்சை!
- News
"2 விஷயத்தை" அமித்ஷாவிடம் முன்வைத்த எடப்பாடியார்.. நல்லது நடக்குமா.. பலத்த எதிர்பார்ப்பு
- Automobiles
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொல மாஸ் சாரே.. மெஷின் கன்ல சிகரெட் பிடிக்கிற அந்த ஒரு சீன் போதும்.. தெறிக்குது கேஜிஎஃப் 2 டீசர்!
சென்னை: கேஜிஎஃப் படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சமூக வலைதளத்தில் இரவே கசிந்து விட்டது.
அதனால், சட்டென தனது முடிவை மாற்றிய இயக்குநர், தற்போது அதிகாரப்பூர்வமாகவே கேஜிஎஃப் சாப்டர் 2 டீசரை வெளியிட்டுள்ளார்.
மெஷின் கன்னில் போலீஸ் வாகனங்களை சுட்டு பறக்க விட்டு அந்த நெருப்பில் சிகரெட் பத்த வைக்கிற சீன் அனல் பறக்கிறது.
இன்னொரு வாட்டி பசங்க மேல கை பட்டது.. வாத்தி ரெய்டு வரும்.. மாஸ்டரின் அடுத்த மாஸ் புரமோ ரிலீஸ்!

ராக்கி பாய்க்கு பிறந்தநாள்
கேஜிஎஃப் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நடிகர் யஷ் பரிட்சையமானார். நாளை ஜனவரி 8ம் தேதி நடிகர் யஷ் தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1986ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் பிறந்தவர் யஷ். அவரது இயர்பெயர் நவீன் குமார் கெளடா.

பிரம்மண்ட வெற்றி
கன்னட திரையுலகில் 100 கோடி வசூல் எல்லாம் சாத்தியமா என நினைத்து இருந்த நிலையில், 80 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, 250 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி பான் இந்திய படமாக பட்டையை கிளப்பியது கேஜிஎஃப் முதல் சாப்டர். கன்னட திரையுலகை இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார் இயக்குநர் பிரசாந்த் நீல்.
லீக்கான டீசர்
நடிகர் யஷ்ஷின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் பரிசாக கேஜிஎஃப் சாப்டர் 2 டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால், சில மணி நேரங்களுக்கு முன்பே கேஜிஎஃப் டீசர் லீக்கானதால், உடனடியாக தற்போதே கேஜிஎஃப் சாப்டர் 2 டீசரை இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இந்திரா காந்தி
முதல் பாகத்திலேயே மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் எமர்ஜென்சி பீரியட் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், அப்போது இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்தவரை காட்டி இருக்க மாட்டார்கள். அந்த வேடத்தில் காதலர் தினம், ஆளவந்தான் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் நடித்துள்ளார். தற்போது வெளியாகி உள்ள டீசரில் கம்பீரமாக அவர் நடந்து வரும் காட்சி இடம்பெற்றுள்ளது.

வில்லன் அதீரா
ரவீணாவை தொடர்ந்து வில்லன் அதீராவாக நடித்த சஞ்சய் தத்தின் காட்சிகளும் இந்த டீசரில் அசத்தலாக இடம்பெற்றுள்ளது. கையில் வாளுடன் வைக்கிங் வீரர் போல இருக்கும் காட்சிகள் டீசரில் மிரட்டுகின்றன. ராக்கி பாய்க்கும் அதீராவுக்கும் படத்தில் பயங்கர கிளைமேக்ஸ் சண்டை காட்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிஷன் கன்ல சிகரெட்
முதல் சாப்டரிலேயே ராக்கி பாயின் என்ட்ரி அசத்தலாக இருந்த நிலையில், இரண்டாவது சாப்டரில் அவருடைய டீசர் என்ட்ரி கொல மாஸாக இருக்கு. மிஷன் கன்னில் போலீஸ் ஜீப்களை சுட்டு ஆம்பள படத்தில் பறக்க விடுவது போல பறக்கவிட்டு, எரிந்து கிடக்கும் துப்பாக்கி முனையில் சிகரெட் பற்ற வைக்கும் அந்த ஒரு சீனுக்கே படம் தெறிக்கும் என ரசிகர்கள் கொண்டாடி அருகின்றனர். ஹேப்பி பர்த்டே யஷ்!