நான் கமல் ரசிகன் .. சத்யா படம் தான் என் இன்ஸ்பிரேஷன்.. மாஸ்டர் இயக்குனரின் பேட்டி !

சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பிடித்தமான படங்களை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

Recommended Video

Master teaser exclusive Update | Lokesh kanagraj | Thalapathy Vijay | Vijay Sethupathi

தனது ஒரு படத்தால் தமிழ் ரசிகர்களை மிரள வைத்தவர் தான் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவரது கைதி திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

 Master director lokesh kanagaraj interview

தனது முதல் திரைப்படமான மாநகரத்திலேயே தமிழ் சினிமாவில் உள்ள பலரை தன் படம் மூலம் திரும்பி பார்க்க வைத்தார் லோகேஷ் கனகராஜ், அடுத்து இரண்டாவது படம் கார்த்தியை வைத்து ஒரு பிரம்மாண்ட திரைப்படம் அதுவும் ஹிட் அடிக்க விஜய்யுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ளார்.

தற்போது இயக்குனராக உள்ள பலருக்கும் சினிமா துறைக்குள் வர பல படங்கள் மற்றும் பல இயக்குனர்கள் எடுத்துக்காட்டாக இருப்பர் அப்படி தான் இவருக்கும் தனக்கு உந்துதலாக இருந்த திரைப்படங்களை அவர் தெரிவித்துள்ளார். லோகேஷ் ஒரு தீவிரமான கமல் வெறியன் என்றே கூறலாம் தனது கைதி படத்தில் கூட கடைசியில் கமல் படத்தின் பெயரை பதிவு செய்து இருப்பார், அந்த அளவிற்கு இவர் கமல் ரசிகர்

இவருக்கு கமல் நடித்த சத்யா திரைப்படம் மிகவும் பிடிக்கும் என்றும் அதில் வரும் சண்டை காட்சிகள் அனைத்தும் ஒரு வித்தியாசமாக இருந்ததாகவும் அந்த காட்சிகள் என்னை பல முறை அந்த படத்தை பார்க்க தூண்டியதாகவும் கூறினார்.

அடுத்ததாக அவர் கூறிய திரைப்படம் கமல்ஹாசனின் விருமாண்டி, ஒரு கதையை எப்படி சொல்ல வேண்டும் என்பதை விருமாண்டி படம் பார்த்து தான் கற்று கொண்டேன். அப்படத்தில் முக்கியமாக திரைக்கதை மற்றும் எடிட்டிங் ஸ்டைல் நான் லீனியர் ஆக இருந்தது. இந்த வார்த்தை கேட்ட உடன் தான் தேடினோம் அந்த வார்த்தைக்கான அர்தத்தை எப்போது கேட்டாலும் என்னிடம் விருமாண்டிக்கு ஒரு தனி இடம் உண்டு என்று கூறினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

பல இளம் இயக்குனர்களுக்கு பல முன்னணி இயக்குனர்கள் படம் தான் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும். அதுவும் பலரும் ஹாலிவுட் படங்களை தான் உதாரணமாக கூறுவர், அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் நம் இந்திய திரையுலகில் உள்ள கமல் படங்களை பற்றி கூறியது கமல் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல திரை ரசிகர்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X