Just In
- 44 min ago
காசு வந்தா காக்கா கூட மயிலா மாறிடுதே எப்புடி? பிக் பாஸ் பிரபலத்தை நக்கலடித்த நெட்டிசன் !
- 4 hrs ago
நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.. பாலாஜியுடனான உறவு குறித்து மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!
- 10 hrs ago
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- 15 hrs ago
யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ!
Don't Miss!
- News
"எய்ட்ஸ் இருக்கு".. காதலன் ஒரு மாதிரின்னா.. காதலி வேற லெவல்.. வெலவெலத்த போலீசார்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 27.01.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரப்போகிறதாம்…
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
200 மில்லியன்.. டிக் டாக்கில் சாதனை படைத்த குட்டி ஸ்டோரி.. மாஸ்டர் ஆடியோ லான்ச் எப்போ?
சென்னை: தளபதி விஜய் குரலில் வெளியான குட்டி ஸ்டோரி பாடல், டிக் டாக் செயலியில் 200 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை படைத்துள்ளது.
டிக் டாக்கில் பிரபலங்களாக இருக்கும் பலரும், இந்த பாடலுக்கு, வித்தியாசமான முறையில் பாடி, ஆடி பலவிதமான வீடியோக்களை குவித்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக குட்டி ஸ்டோரி பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது.
|
200 மில்லியன்
அனிருத் இசையில், அருண்ராஜா காமராஜ் வரிகளில், விஜய் குரலில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி வெளியான குட்டி ஸ்டோரி பாடல் டிக் டாக் செயலியில் இதுவரை 200 மில்லியனுக்கும் மேலான வியூஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளது. அதுகுறித்த வீடியோவுடன், இசையமைப்பாளர் அனிருத் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.
|
செகண்ட் சிங்கிள் எங்கடா?
மார்ச் மாதம் முழுவதும் மாஸ்டர் அப்டேட் மாதம் என இயக்குநர் ரத்னகுமார் ட்வீட் போட்டு இருந்தார். ஆனால், இன்னமும், மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டோ அல்லது இசை வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என்பது குறித்த அப்டேட்டோ அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதனால், விஜய் ரசிகர்கள் அப்டேட் வேண்டும் என கேட்டு வருகின்றனர்.
|
வைரலாகும் மீம்
நாளைக்கு மாஸ்டர் அப்டேட்.. அப்படி நாளைக்கு அப்டேட் வரலைனா.. திரும்பவும் இந்த ட்வீட்டை படி என தளபதி ரசிகர்கள் புதுசு புதுசா மீம் போட்டு, ட்விட்டரை கலகலப்பாக்கி வருகின்றனர். மாஸ்டர் படத்தின் அப்டேட் வேண்டும் என விஜய் ரசிகர்கள் பலரும் தொடர்ந்து, கமெண்ட் செய்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
|
காப்பி கிங் அட்லி
அனிருத்தின் இந்த 200 மில்லியன் ட்வீட்டுக்கு கீழே, அஜித் ரசிகர்கள் ட்ரோல் வீடியோக்களையும், கமெண்ட்டுகளையும் பதிவிட்டு ட்விட்டர் சண்டை செய்து வருகின்றனர். வேறு வழி இல்லாமல், விஜய் படங்களின் காட்சிகளையே இயக்குநர் அட்லி காப்பி அடித்துள்ளார் என போட்டுள்ள கம்பேரிசன் வீடியோவும் வைரலாகி வருகிறது.
|
தெறிக்க விடணும்
விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஸ்ரீமன், ஸ்ரீநாத், விஜே ரம்யா, செளந்தர்யா, பிரேம் குமார் என நட்சத்திர பட்டாளமே மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறது. மாஸ்டர் படத்தில் தளபதி பிஜிஎம் சும்மா தெறிக்க விடணும் அனிமா என இசையமைப்பாளர் அனிருத்துக்கு ரசிகர்கள் அன்பு ஆர்டர் போட்டு வருகின்றனர்.
|
ஆடியோ லான்ச்
மாஸ்டர் படத்துக்கு இசையமைத்து வரும் ராக்ஸ்டார் அனிருத் போட்ட ட்வீட்டை டேக் செய்து மாஸ்டர் நடிகர் ஷாந்தனு, விரைவில் ஆடியோ லான்ச் குறித்த அப்டேட் வெளியாகும் என திட்டவட்டமாக கூறியுள்ளார். இன்று மாலை நிச்சயம், இசை வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது.