Just In
- 5 hrs ago
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!
- 6 hrs ago
அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா? இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை!
- 7 hrs ago
ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்!
- 8 hrs ago
திடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா? வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்!
Don't Miss!
- News
ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்
- Automobiles
மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?
- Sports
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்
- Finance
இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!
- Lifestyle
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புள்ளிங்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்குமா? கிடைக்காதா? ரத்னகுமார் ட்வீட் டெலிட் பண்ண என்ன காரணம்?
சென்னை: நடிகர் விஜய்யின் மாஸ்டர் படக்குழுவிடம் இருந்து தளபதி ரசிகர்களுக்கு பொங்கல் பரிசு காத்திருக்கிறது என்ற ட்வீட்டை போட்ட ரத்னகுமார், சட்டென்று அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார்.
மாஸ்டர் படக் குழுவிடம் இருந்து மாஸான பொங்கல் அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள் சட்டென்று நீக்கப்பட்ட ட்வீட்டால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பொங்கலை முன்னிட்டு இன்று மாலை வெளியாகும் என்ற தகவலும் உலா வருகிறது.

விஜய்சேதுபதி பிறந்தநாள்
வரும் ஜனவரி 16ம் தேதி நடிகர் விஜய்சேதுபதியின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. விஜய்சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் விஜய்சேதுபதி லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் செகண்ட் லுக்
ஆனால், அதற்கு முன்னதாக பொங்கலை முன்னிட்டு தளபதி விஜய் மீசையின்றி இருக்கும் மாஸ்டர் செகண்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்டேட் கிங்
மாஸ்டர் படம் குறித்த அப்டேட்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தளபதி ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் இயக்குநர் ரத்னகுமார், தற்போது ட்விட்டர் வரவும் பொங்கல் பரிசு காத்திருக்கிறது என்ற ட்வீட்டை போட்டு சற்று நேரத்தில் ஏதோ உத்தரவு வர அதனை நீக்கியுள்ளார்.

ரசிகர்கள் அப்செட்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமாரை அந்த பதிவை நீக்க சொல்லியிருப்பார் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். பொங்கல் அன்று எந்தவொரு அப்டேட்டும் கிடைக்காது என்றும், விஜய்சேதுபதியின் பிறந்த நாளன்று தான் அடுத்த லுக் வெளியாகும் என்ற கண்டிஷனில் தான் என்னவோ ரத்னகுமார் அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார். இதனால், தளபதி ரசிகர்கள் சற்றே அப்செட் ஆகியுள்ளனர்

பொங்கல் விடுமுறை
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், செளந்தர்யா, கெளரி கிஷன், ரம்யா, சேத்தன், பிரேம், ஸ்ரீநாத் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். பொங்கல் விடுமுறையை முன்னிட்டு அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் மீண்டும் மாஸ்டர் ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது.

விஜய் – விஜய்சேதுபதி மோதல்
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மோதும் மாஸ் சண்டை காட்சிகள் பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர் எடுக்கப்படும் என்ற அப்டேட்டை விருது விழா நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பரிசு
தளபதி ரசிகர்களின் தற்போதைய ஒரே கவலை இந்த பொங்கலுக்கு மாஸ்டர் படத்தின் அடுத்த அப்டேட் அல்லது தளபதி தரிசனம் ஏதாவது ஒன்று கிடைத்தால், பொங்கலை வேற லெவலில் கொண்டாட தொடங்கிவிடுவார்கள். அவர்களுக்கான பொங்கல் பரிசு கிடைக்குமா? கிடைக்காதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.. வெயிட்டிங்!