»   »  கோடம்பாக்கம்... இந்த மே மாசம்.. ஒரு ப்ளாஷ்பேக்!

கோடம்பாக்கம்... இந்த மே மாசம்.. ஒரு ப்ளாஷ்பேக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த மே மாதம் முழுக்க தமிழகத்தில் பரபரப்புகளுக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது.

ஒரு பக்கம் அரசியல் களம், தேர்தல் விறுவிறுப்புகள், தலைவர்கள் கூத்துகளில் பிஸியாக இருக்க, கோடம்பாக்கத்திலும் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லை.

கபாலி டீசரில் தொடங்கிய மே மாதம்

கபாலி டீசரில் தொடங்கிய மே மாதம்

மே மாதம் முதல் தேதியன்று ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தின் முதல் டீசர் வெளியானது. காலையில் ட்ரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து குளித்து முடித்து, செல்போன், டேப், லேப்டாப், கம்ப்யூட்டர்கள் சகிதமாக காத்திருக்க ஆரம்பித்தனர் ரசிகர்கள். டீசர் வெளியானது. யுட்யூப் திணறியது... புதிய சரித்திரம் படைத்தது. அன்று அஜீத்தின் பிறந்த நாள் என்பதே சினிமாக்காரர்கள் பலருக்கும் மறந்து போனது.

விஜய்யின் அரசியல் அலர்ஜி

விஜய்யின் அரசியல் அலர்ஜி

அரசியல், தேர்தல் போன்றவற்றில் அதீத ஆர்வம் காட்டி வந்த விஜய், கடந்த 5 ஆண்டுகளாக சைலன்ட் மோடுக்குப் போய்விட்டார். காரணம் என்னவென்று புதிதாகச் சொல்ல வேண்டுமா என்ன... இந்தத் தேர்தலில் ஏதாவது பண்ணுவார்... தேர்தல் பரபரப்பாகும் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம். எந்த கட்சிக்கும் ஆதரவில்லை.. எல்லோரும் அமைதியா இருங்க என்று கூறி கப்சிப்பென்றாக்கிவிட்டார் மே 3-ம்தேதி.

மறக்கத்தான் முடியுமா சுஜாதாவை...

மறக்கத்தான் முடியுமா சுஜாதாவை...

இதே மே 3-ம் தேதிதான் எழுத்தாளர் அமரர் சுஜாதா பிறந்த தினம். பொதுவாக இதுபோன்ற ஆளுமைகளின் நினைவு தினத்தைத்தான் பெரிதாக நினைவு கூர்வார்கள். ஆனால் எழுத்துலக சூப்பர் ஸ்டாரான சுஜாதாவின் நினைவு தினதைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

புறக்கணித்த இளையராஜா

புறக்கணித்த இளையராஜா

தாரை தப்பட்டை படத்துக்காக தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை வாங்க மறுத்து புறக்கணித்துவிட்டார். காரணம் பாடலுக்கு தனி, பின்னணி இசைக்கு தனி என பிரித்து விருது வழங்குவதில் தனக்கு உடன்பாடு இல்லை என மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டார் ராஜா.

உலகை திரும்பிப் பார்க்க வைத்த கபாலி

உலகை திரும்பிப் பார்க்க வைத்த கபாலி

வெளியான மூன்றே நாட்களுக்குள் 1 கோடி பார்வைகளுக்கு மேல் பெற்று சாதனைப் படைத்த ரஜினிகாந்தின் கபாலி டீசர், சர்வதேச அளவில் விமர்சகர்கள், ஊடகங்களைப் பேச வைத்தது.

றெக்க முளைத்த விஜய் சேதுபதி

றெக்க முளைத்த விஜய் சேதுபதி

மே 6-ம் தேதி விஜய் சேதுபதி - லட்சுமிமேனன் முதல் முறை ஜோடி சேரும் றெக்க படம் ஆரம்பித்தது.

24 ரிலீஸ்

24 ரிலீஸ்

சூர்யாவும் அவரது ரசிகர்களும் பெரிதும் எதிர்ப்பார்த்த 24 படம் வெளியானது மே 6-ம் தேதிதான். படம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்தாலும், வசூலில் பரவாயில்லை என்று பெயர் பெற்றுவிட்டது.

ஸ்ருதியின் ஹஸ்பென்ட் 'வெளாட்டு'

ஸ்ருதியின் ஹஸ்பென்ட் 'வெளாட்டு'

இவர்தான் என் ஹஸ்பென்ட் என்று விளையாட்டுத்தனமாக ஒரு செல்ஃபியை வெளியிடப் போய், தேவையற்ற சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் ஸ்ருதி ஹாஸன்.

அன்னையர் தின பரிசு

அன்னையர் தின பரிசு

அன்னையர் தினமான மே 8-ம் தேதி, தனது அன்னைக்கு கோயில் கட்டி, அவரது சிலையையும வடிவமைத்து பரிசளித்தார் ராகவா லாரன்ஸ்.

அம்மாவுக்காக நமீதா செய்த பிரார்த்தனை

அம்மாவுக்காக நமீதா செய்த பிரார்த்தனை

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்று திருப்பதி திருமலைக்குப் போய் பிரார்த்தனை செய்தார் நமீதா. அவரது பிரார்த்தனைக்கு உரிய பலனும் கிடைத்தது.

கஸ்தூரிப் பாட்டி

கஸ்தூரிப் பாட்டி

மயக்கம் என்ன உள்ளிட்ட பல படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்த கஸ்தூரிப் பாட்டி கலக்கத்துக்குள்ளான நாள் மே 10. இவர் நடித்த அதிமுக, திமுக தேர்தல் விளம்பரங்கள் ஒரே நேரத்தில் வெளியாக, 'அய்யோ.. எனக்கே தெரியாம திமுக விளம்பரத்துல நடிச்சிட்டேன்...' என்று புலம்பினார்.

தேர்தல் நேரத்தில் வெளியான புதுப் படங்கள்

தேர்தல் நேரத்தில் வெளியான புதுப் படங்கள்

கோ 2, பென்சில், உன்னோடு கா, ஜம்புலிங்கம் 3டி ஆகிய நான்கு படங்கள் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு வெளியாகின. நான்குமே அவுட்!

ரஜினி - பாலகுமாரன்

ரஜினி - பாலகுமாரன்

ரஜினிகாந்துடன் எழுத்தாளர் பாலகுமாரன் மே 13-ம் தேதி சந்தித்தார். ரஜினியைப் போன்ற மிகமிக நல்ல மனிதனைப் பார்க்க முடியாது என்று பாராட்டினார்.

தியேட்டரிலேயே திருட்டு விசிடி

தியேட்டரிலேயே திருட்டு விசிடி

பெரிய மால்... நம்பிக்கையோடு படம் தரலாம் என தயாரிப்பாளர்கள் நம்பிய பிவிஆர் மாலிலேயே திருட்டு வீடியோ எடுப்பது அம்பலமானது மே 14-ம் தேதி. 24 படத்தை பிவிஆரில் திருட்டுத்தனமாகப் பதிவு செய்தது அம்பலமானது.

தேர்தல் திருவிழா

தேர்தல் திருவிழா

மே 16-ம் தேதி தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் திருவிழா மாதிரி நடந்தது. திரையுலகினர் பெருமளவில் திரண்டு வந்து வாக்களித்தனர். ரஜினி, அஜீத், கமல், விஜய் என பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

சாந்தி திரையரங்கின் கடைசி நாள்

சாந்தி திரையரங்கின் கடைசி நாள்

சென்னையின் பிரபல திரையரங்கமான சாந்தி மூடப்பட்ட தினம் மே 17. இந்த திரையரங்கில் அதிக நாட்கள் ஓடிய படம் சந்திரமுகி. 808 நாட்கள். கடைசியாக ஓடிய படம் 24.

தனுஷின் முதல் தோற்றம்

தனுஷின் முதல் தோற்றம்

கவுதம் மேனன் இயக்கும் என்னை நோக்கிப் பாயும் தோட்டாவில் தனுஷின் முதல் கெட்டப் மே 18-ம் தேதி வெளியானது.

அம்மாவுக்கு ஜே!

அம்மாவுக்கு ஜே!

மே 19-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி. திரையுலகமே வாழ்த்து மழைப் பொழிந்தது.

மருது

மருது

தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே தனது மருது படத்தை வெளியிட்டார் விஷால். படம் சுமார் என்று ரிப்போர்ட் வந்தாலும், பி & சி சென்டர்களில் ஓரளவுக்கு பிக்அப் ஆகிவிட்டது.

மீண்டும் ஷூட்டிங்கில்

மீண்டும் ஷூட்டிங்கில்

தேர்தலில் படுதோல்வியைத் தழுவிய கையோடு மே 21-ம் தேதி மீண்டும் நடிக்கப் போய்விட்டார் விஜயகாந்த். படம் தமிழன் என்று சொல்!

சபாஷ் நாயுடு

சபாஷ் நாயுடு

சபாஷ் நாயுடு படப்பிடிப்புக்காக மே 24-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டார் கமல் ஹாஸன். போன கையோடு அமெரிக்க ஸ்டுடியோக்களைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டார் கமல்.

கவுண்டர் பிறந்த நாள்

கவுண்டர் பிறந்த நாள்

மே 25 கவுண்டமணியின் பிறந்த நாள். இணையம் முழுக்க அவரது ரசிகர்களும் சினிமா விரும்பிகளும் வாழ்த்து மழை பொழிந்தனர். அவரது பழைய சினிமா காட்சிகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.

அமெரிக்காவில் ரஜினி

அமெரிக்காவில் ரஜினி

மே 26-ம் தேதி கோடை விடுமுறையை ஓய்வில் கழிப்பதற்காக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.

நீண்ட இழுவைக்குப் பிறகு

நீண்ட இழுவைக்குப் பிறகு

சிம்பு நடித்த இது நம்ம ஆளு, நீண்ட இழுபறிக்குப் பிறகு வெளியானது. நான்கு மாவட்டங்களில் மட்டும் வெளியாகவில்லை, காரணம் கடன் தொல்லை. அதே நாளில் ‘உரியடி,' ‘சுட்டபழம் சுடாத பழம்,' ‘மீரா ஜாக்கிரதை,' ‘ஜெனிபர் கருப்பையா' என மேலும் நான்கு புதிய படங்கள் ரிலீசாகின.

வேந்தர் மூவீஸ் மதன் விவகாரம்

வேந்தர் மூவீஸ் மதன் விவகாரம்

வேந்த மூவீஸ் மதன் காணாமல் போன தினம் மே 29. பாரிவேந்தருடன் பிணக்கு காரணமாக, கங்கையில் சமாதியாகப் போவதாக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் காணாமல் போய்விட்டார். காசி கங்கை நதியில் படகு மூலம் அவரைத் தேடி வருகிறார்கள்.

சூர்யா

மே 30-ம் தேதி நடுச்சாலையில் முதிய பெண்மணி ஒருவருடன் தகராறு செய்த இளைஞன் ஒருவன் நடிகர் சூர்யா அடித்துவிட்டதாக போலீசில் புகார்.

English summary
Here is the interesting happenings in Kollywood during the month of May 2016.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos