»   »  மய்யம்... கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் உருவாக்கும் நகைச்சுவை த்ரில்லர்!

மய்யம்... கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் உருவாக்கும் நகைச்சுவை த்ரில்லர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏ பி ஸ்ரீதர்... திரையுலகிலும், கலையுலகிலும் வெகு பரிச்சயமான பெயர். இவர் முதல் முறையாக ஒரு புதிய படத்தைத் தயாரிக்கிறார். அந்தப் படத்தின் தலைப்பு மய்யம்.

படத்தின் சிறப்பு, இன்னும் கல்லூரிப் படிப்பைக் கூட மாணவர்களின் கூட்டணியில் உருவாக்கப்படுவதுதான்.

எஸ்ஆர்எம் மாணவர்கள்

எஸ்ஆர்எம் மாணவர்கள்

இந்தப் படத்தின் இயக்குநர் ஆதித்யா பாஸ்கரன். எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் பொறியியல் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றியதில்லை. நான்கு குறும்படங்களில் பெற்ற அனுபவத்தில் இயக்கியுள்ளார்.

படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் சகோதரி மகன் கேஆர். இவரும் எஸ்ஆர்எம்மில் விஸ்காம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார்.

ஹீரோ

ஹீரோ

ஹீரோவாக அறிமுகமாகும் ஹாஷிம் ஜெயின் எஸ்ஆர்எம்மில் விஸ்காம் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறார். ஒளிப்பதிவு ஃபிர்னாஸ் ஹுசைன் இவர் புனித பாட்ரிஷியன் கல்லூரியில் விஸ்காம் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.

12 மாணவர்கள்

12 மாணவர்கள்

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல.. பிரேம் ஷங்கர் (பாடல் கருத்துரு), வருணா ஸ்ரீதர் (ஆடை வடிவமைப்பு), நந்தகிஷோர் (உதவி இயக்குநர்), நமிதா சப்கோட்டா (உதவி இயக்குநர்), பரக்சாப்ரா (பாடகர்), ஆர்த்தி பட்நாகர் (பாடல்), ராஜ்லட்சுமி (நடனம்), அவ்லின் (நடனம்) என மொத்தம் 12 மாணவர்கள் படத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளனர்.

ரோபோ ஷங்கர்

ரோபோ ஷங்கர்

படத்தில் காமெடிக்கு முழுப் பொறுப்பு ரோபோ ஷங்கருக்குதான். டீசர் மற்றும் ட்ரைலர்களில் கலக்கியுள்ளார். சின்னச் சின்ன வேடங்களிலிருந்து பெரிய புரமோஷன் இந்தப் படத்தில். பூஜா தேவரியா என்பவர் நாயகியாக அறிமுகமாகிறார்.

ஏபி ஸ்ரீதர்

ஏபி ஸ்ரீதர்

தயாரிப்பாளர் ஏபி ஸ்ரீதரிடம் பேசியபோது, "எனது இந்த ஸ்கெட்ச் புக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி வைத்தவர் இயக்குநர் கே பாலச்சந்தர் அவர்கள். முழுக்க முழுக்க கல்லூரி மாணவர்களை வைத்தே ஒரு படம் உருவாக்க வேண்டும் என்பது என் ஆசை. அதை இந்தப் படம் மூலம் நிறைவேற்றிக் கொண்டேன். சரியாக திட்டமிட்டு, 37 நாட்களில் இந்தப் படத்தை உருவாக்கிவிட்டோம். மாணவர்களின் விடுமுறை நாட்களில்தான் இந்தப் படத்தை எடுத்தோம்," என்றார்.

அடுத்த மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

English summary
Mayyam is a new movie under production that making by college going students and produced by artist AP Sridhar.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil