»   »  அவருடன் மீண்டும் சேரும் பேச்சுக்கே இடம் இல்லை: நடிகரின் முன்னாள் மனைவி கறார்

அவருடன் மீண்டும் சேரும் பேச்சுக்கே இடம் இல்லை: நடிகரின் முன்னாள் மனைவி கறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நானும், பவன் கல்யாணும் மீண்டும் கணவன், மனைவியாக முடியாது என்று ரேணுகா தேசாய் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணுகா தேசாய். அவரை பவன் கல்யாண் ரசிகர்கள் இன்னும் அண்ணி என்றே அழைக்கிறார்கள்.

பவன் கல்யாணுடன் மீண்டும் சேர்ந்து வாழுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து ரேணுகா ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

பவன் கல்யாண் ஆன்னாவை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அழகான பெண் குழந்தை உள்ளது. அவர்களின் திருமணம் மற்றும் ஆன்னாவை மதிக்கிறேன்.

ஆன்னா

ஆன்னா

தயவு செய்து என்னை அவருடன் சேர்ந்து வாழுமாறு யாரும் கேட்டுக் கொள்ள வேண்டாம். ஆன்னா தான் பவன் கல்யாணின் மனைவி, நான் இல்லை.

நண்பர்கள்

நண்பர்கள்

நானும், பவன் கல்யாணும் நல்ல நண்பர்களாக உள்ளோம். ஆனால் மீண்டும் கணவன், மனைவியாகவே முடியாது. அது நடக்காது. அவர் ஆன்னாவை மணந்து வாழ்கிறார்.

முடியாது

முடியாது

ஆன்னாவின் கணவரான பவன் கல்யாணுடன் நான் எப்படி சேர்ந்து வாழ முடியும். இது சாத்தியமே இல்லை. தயவு செய்து இனி இது பற்றி யாரும் பேச வேண்டாம் என்றார் ரேணுகா.

English summary
Telugu actor Pawan Kalyan's former wife Renuka Desai said that Pawan and she can never be husband and wife again.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil