கொடுமையா இருக்கு... எப்பதான் கொரோனா என்னை விட்டு போகுமோ தெரியல... 96 நடிகை கவலை
சென்னை : 96 படத்தின் நாயகி கௌரி கிஷன் அந்த படத்தில் சிறப்பான நடிப்பிற்காக பேசப்பட்டவர்.
அவருக்கு கடந்த மாத்தில் கொரோனா பாதித்தது. இதையடுத்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கெண்டார்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு தன்னை விட்டு எப்போது நீங்குமோ என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த கௌரி கிஷன்
96 படத்தின் சிறுவயது ஜானுவாக நடித்து அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்தவர் கௌரி கிஷன். தொடர்ந்து மாஸ்டர் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அனைவரையும் கவரும்வகையில் இவரது நடிப்பு அமைந்திருந்தது.

வீட்டில் தனிமை
இந்நிலையில் கடந்த மாதத்தில் இவருக்கு கொரோனா பாதித்தது. இதையடுத்து தன்னை தனது வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தான் நடந்து கொள்வதாகவும் கவலை கொள்வதற்கு ஒன்றும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

ரசிகர்கள் பிரார்த்தனை
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியிருந்தார். இதன்மூலம் முன்னதாகவே கொரோனா தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து அவர் கூடியவிரைவில் தேற ரசிகர்கள் அனைவரும் பிரார்த்திப்பதாக தெரிவித்திருந்தனர்.

புகைப்படம் வெளியீடு
இந்நிலையில் கொரோனா தன்னை விட்டு வெளியேறுவதற்காக தான் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தான் வருத்தத்துடன் உள்ளதான புகைப்படத்தையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனாவால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.


Click it and Unblock the Notifications











