»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகையும் மாடலுமான மேதா விலாசினியை கற்பழிக்க முயன்று, இப்போது தலைமறைவாகிவிட்ட அஜீத்மேனனைப் பிடிக்க 3 தனிப்படைகளை சென்னை அசோக் நகர் போலீஸார் அமைத்துள்ளனர்.

மாடல் அழகி மேதா லண்டனில் நடந்த மாடலிங் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது, அஜீத் மேனன்தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், கற்பழிக்க முயன்றதாகவும் கூறி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார்கொடுத்துள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் புகார் தொடர்பாக அசோக் நகர் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். லண்டனில் இருந்து ஊர் திரும்பிவிட்ட அஜீத் மேனனும், அவரது மாமா ஜெய்சங்கரும் தற்போதுதலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க 3 தனிப்படைகளை போலீஸார் அமைத்துள்ளனர்.

மேதாதான் அஜீத்தை முதலில் அடித்ததாக அஜீத் குடும்பத்தினர் கூறியுள்ள புகார் குறித்து போலீஸாரிடம்கேட்டபோது,

மேதா அடித்திருந்தாலும் கூட ஒரு பெண்ணை திருப்பி அடித்தது குற்றமாகும். அஜீத் அடித்ததால் மேதாவின்உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவே முக்கிய சாட்சியாகும். எனவே அஜீத் மேனன் நிச்சயம் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்படுவார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, முன் ஜாமீன் கோரி அஜீத் மற்றும் ஜெய்சங்கர் தாக்கல் செய்துள்ள மனுக்கள் சென்னை முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

  • மாடல் மேதாவின் கற்பழிப்பு புகார்: முன் ஜாமீன் கோரும் அஜீத் மேனன்
  • நடிகை மேத்தாவை கற்பழிக்க முயற்சி

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil