#airaa... இது நயன்னு சொன்னா விக்னேஷ் சிவனே நம்ப மாட்டாரேப்பா..!
ஐரா படத்தின் முதல் பாடல், ‘மேகதூதம்’ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video

சென்னை: ஐரா படத்தின் மேகதூதம் பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதில், வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார் நயன்தாரா
இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் படம் ஐரா. முதன்முறையாக இப்படத்தில் நயன் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். கலையரசன், யோகிபாபு, ஜே.பீ. மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. மேகதூதம் எனத் தொடங்கும் பாடல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உள்ளது.

மெலடி:
கவிஞர் தாமரையின் வரிகளுக்கு குரல் வடிவம் கொடுத்திருக்கிறார் பத்மபிரியா ராகவன். கேட்பதற்கு இனிமையான மெலடிப் பாடலாக அமைந்துள்ளது இந்தப் பாடல். படத்தில் நயனின் இந்தக் கதாபாத்திரப் பெயர் பவானி என்பதால், இதனை பவானி ஆந்தம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்.

நயனா இது?
இந்தப் பாடல் காட்சிகள் கருப்பு வெள்ளையில் உள்ளது. அடையாளமே தெரியாத அளவிற்கு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார் நயன். கருமையான தோற்றத்தில், பெரிய பொட்டுடன், வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் சாதாரணப் புடவையில் எளிமையாகக் காணப்படுகிறார்.

கனமான கதாபாத்திரம்:
படத்தில் கலையரசன் இந்த கேரக்டருக்குத் தான் ஜோடியோ என இந்த பாடல் எண்ண வைக்கிறது. இல்லை, கலையரசன் மீது நயனுக்கு ஒருதலைக் காதலா எனத் தெரியவில்லை. ஆனால், நயனின் வித்தியாசமான கெட்டப்பைப் பார்த்தே நிச்சயம் அவரது இந்தக் கதாபாத்திரம் கனமானதாகத் தான் இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
எதிர்பார்ப்பு:
ஏற்கனவே, இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியான நாளில் இருந்தே படம் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்தது. தற்போது முதல் பாடலில் நயனின் கெட்டப்பும், பாடல் வரிகளும், இசையும் இன்னும் படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











