மெலடி கிங் ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்... அசத்தல் வீடியோ வெளியீடு
சென்னை : தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி சினிமாக்களில் தனது இனிய இசையின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். மெலடி கிங் என அனைவராலும் புகழப்படும் ஹாரிஸ் ஜெயராஜ் இன்று தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
தனது ஆறாவது வயதிலேயே இசையை கற்க துவங்கியவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரது தந்தை ஜெயக்குமார், மலையாள சினிமா இசையமைப்பாளர் ஷ்யாமிடம் கிடார் கலைஞராக பணியாற்றியவர். 12 வயதிலேயே இசைப்பயணத்தை துவங்கிய ஹாரிஸ் ஜெயராஜ், ஆரம்பத்தில் விளம்பர படங்களுக்கு இசை அமைத்து வந்தார்.

மின்னலாய் வந்த இசை
கெளதம் மேனன் இயக்கிய மின்னலே மூலம் சினிமாவிற்குள் நுழைந்த ஹாரிஸ் ஜெயராஜ், முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம்ஃபேர் விருதினை பெற்றார். அதற்கு முன் தொடர்ந்து 9 ஆண்டுகளாக ஏ.ஆர்.ரஹ்மான் தான் இந்த விருதினை பெற்று வந்தார். லேசா லேசா. காக்க காக்க போன்ற படங்கள் ஹாரிஸ் ஜெயராஜின் மாஸ்டர் பீஸ் பாடல்களாக அமைந்தன.

பிரம்மாண்ட ஸ்டூடியோ
2017 ம் ஆண்டு Studio H என்ற புதிய ஸ்டூடியோவை தவக்கினார். இந்த ஸ்டூடியோவில் லேட்டஸ்ட் ரெகார்டிங் கருவிகள் அனைத்தும் உள்ளன. தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஹிட் பாடல்களை மட்டுமே கொடுத்து வரும் இசையமைப்பாளர்களில் ஹாரிஸ் ஜெயராஜிற்கு முக்கிய பங்கு உண்டு.

ஹாரிஸ் ஜெயராஜ் படங்கள்
சாமுராய், சாமி, செல்லமே, அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, பீமா, தாம் தூம், வாரணம் ஆயிரம், அயன், கோ, ஏழாம் அறிவு, ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பன், துப்பாக்கி, இருமுகன், மாற்றான், என்னை அறிந்தால், ஸ்பைடர், தேவ், காப்பான், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் ஹிட்டான பல பாடல்களுக்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்.

ஸ்பெஷல் வீடியோ வெளியீடு
தற்போது லெஜன்ட் சரவணன் நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது அவரின் இசை ஆல்பம் பற்றிய ப்ரோமோ வீடியோவாகும்.

இவ்வளவு பிரம்மாண்டமா
பாடலாசிரியர் விவேக் வரிகளில், கார்த்திக் தயாரிப்பில் இந்த ஆல்பம் வெளியிடப்பட உள்ளதாம். ஹாரிஸ் ஜெயராஜ் உருவாக்கி வரும் இந்த இசை ஆல்பம் விரைவில் வெளியிடப்பட உள்ளதாம். இந்த ப்ரோமோ வீடியோவில் முதல் முறையாக தனது பிரம்மாண்ட ஸ்டூடியோ ஹச் ஸ்டூடியோவை அவர் ரசிகர்களுக்கு காட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications











