»   »  விஜய் ரசிகர்களுக்கு 'மெர்சல் பொங்கல்'... 100-வது நாளுக்கு பிரபல திரையரங்கின் ஏற்பாடு!

விஜய் ரசிகர்களுக்கு 'மெர்சல் பொங்கல்'... 100-வது நாளுக்கு பிரபல திரையரங்கின் ஏற்பாடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்த 'மெர்சல்' படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி இருந்தது. வசூலில் மாபெரும் சாதனை படைத்த 'மெர்சல்' திரைப்படம் வரும் பொங்கலன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

சில மாதங்களிலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் மெர்சல் 100-வது நாளை பிரம்மாண்டமாக கொண்டாட பிரபல திரையரங்கான ரோஹினி தியேட்டர் நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதனால், இந்த வருட மெர்சல் பொங்கலாக கொண்டாட ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

mersal celebrates 100th day

'மெர்சல்' படத்தை மீண்டும் படத்தை திரையரங்கில் வெளியிட இருக்கின்றனர். அதற்காக இதுவரை படத்திற்கு 500 டிக்கெட்டுக்கள் விற்றிருப்பதாக அத்திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரண் தன்னுடைய ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு மெர்சல் படத்தின் 50-வது நாள் விழா இந்தத் திரையரங்கில் ரசிகர்களால் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 'மெர்சல்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமயத்தில் 100-வது நாள் ஷோ தியேட்டரில் திரையிடப்படுவதல் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.

English summary
Rohini Theater, plans to celebrate the 100th day of Mersal. So far, 500 Mersal tickets has sold. This is why fans are eager to celebrate Pongal this year as Mersal pongal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X