»   »  தடையா... நஹி... இதோ மெர்சல் 3300 தியேட்டர்களில் ரிலீஸ்!

தடையா... நஹி... இதோ மெர்சல் 3300 தியேட்டர்களில் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கேளிக்கை வரி விதிப்பை எதிர்த்து புதுப் படங்களை வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்து செயல்படுத்தி வரும் நிலையில், தடையை மீறி விஜய்யின் மெர்சல் படத்தை வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.

உலகம் முழுவதும் வரும் அக்டோபர் 18 ம் தேதி மெர்சல் படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். மேலும் #MersalDiwali #7DaysToGo என்ற ஹேஷ்டேக்குகளை வெளியிட்டு ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.

Mersal confirms on October 18

உலகம் முழுவதும் 3300 அரங்குகளில் மெர்சல் படத்தை வெளியிடுகிறார்கள். தமிழகத்தில் மட்டும் 500 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. கேரளாவில் 325 அரங்களுகளில் மெர்சல் வெளியாகிறது.

தெலுங்கில் அதிரிந்தி என்ற பெயரில் வெளியாகும் மெர்சலுக்கு இதுவரை எந்த விஜய் படத்துக்கும் இல்லாத அளவுக்கு அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்குள் தயாரிப்பாளர் சங்க ஸ்ட்ரைக் முடிந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முடியாவிட்டாலும் படத்தை ரிலீஸ் செய்வதில் உறுதியாக இருக்கிறார் மெர்சல் தயாரிப்பாளர்.

English summary
Though the Producers Council observs an indefinite strike in releasing new movies, Vijay's Mersal has confirmed for Diwali day October 18.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil