»   »  மெர்சல் படத்தின் வெளியிடப்படாத 5-வது பாடல் லிரிக்ஸ் இதுதான்!

மெர்சல் படத்தின் வெளியிடப்படாத 5-வது பாடல் லிரிக்ஸ் இதுதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வரவிருக்கும் 'மெர்சல்' படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பாடலாசிரியர் விவேக், ஒரு சர்ப்ரைஸை அறிவிப்பதாகக் கூறியிருந்தார், தற்போது அவர் அதை வெளியிட்டுள்ளார்.

இசை வெளியீட்டு விழாவில் வெளியிட்டது போக 'மெர்சல்' படத்தில் இடம்பெறும் ஐந்தாவது பாடலின் முதலிரண்டு வரிகளை வெளியிட்டுள்ளார் பாடலாசிரியர் விவேக்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

விஜய்யின் 'மெர்சல்' பட எதிர்ப்பார்ப்பு அதிகமாகிக் கொண்டு வருகிறது. படத்தை அழகாக அட்லீ எடுத்து முடித்தாலும் தயாரிப்புக் குழு செமையாக படத்தை ப்ரொமோட் செய்து வருகின்றனர்.

பாடல்கள் ஹிட்

பாடல்கள் ஹிட்

இந்தப் படத்தில் இடம்பெறும் 4 பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி செம ஹிட் ஆகியிருக்கின்றன. இப்போது, படத்தில் போனஸாக மேலும் ஒரு பாடலை ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க பாடலாசிரியர் விவேக் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.

அழிக்க நெனச்சா

'தடையின் தடயம் உடைய உருக... அழிக்க நெனச்சா, ரெண்டா வருவானே..!' என்று இந்த 'மாயோன்' பாடல் தொடங்குவதாக விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேஜிக் கான்செப்ட்

மேஜிக் கான்செப்ட்

இந்த பாடல் மேஜிக் கலைஞர் விஜய்க்காக உருவாக்கப்பட்டதாம். மேஜிக் கான்செப்ட்டை பாடலில் பயன்படுத்தியிருப்பதாகவும், வித்தியாசமான முயற்சியை செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார் பாடலாசிரியர் விவேக்.

English summary
The upcoming 'Mersal' film to Diwali has been a huge expectation among fans.There is another song in the film 'Mersal' not released at the audio launch. Lyricist vivek shared first two lines of maayon song.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil