»   »  நாளை விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

நாளை விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் மெர்சல் படம் குறித்து தினமும் ஒரு அறிவிப்பு வர ஆரம்பித்துள்ளது.

படத்தின் டீசர், பாடல் டீசர், ஆடியோ ரிலீஸ் என அடுத்தடுத்து விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நிகழ்வுகள் அரங்கேறிய நிலையில், இன்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Mersal lyric videos from Tomorrow

ஏஆர் ரஹ்மான் இசையில் இப்படத்தில் இடம் பெறும் 'நீதானே...' மற்றும் 'மெர்சல் அரசன்...' ஆகிய பாடல்களின் வரிகள் அடங்கிய வீடியோவை நாளை மாலை 4 மணியளவில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

விஜய் ரசிகர்களுக்கு இது இரட்டை விருந்து. அடுத்து இப்படத்தின் ட்ரைலர் அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சல் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாக உள்ளது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்துள்ளார்கள். அட்லி இயக்கியுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

English summary
Mersal team has announced that the lyric videos of the movie will be released Tomorrow

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil