»   »  "அல்லு சில்லு செதறனும்டா".. மிரட்டும் மெர்சல் "லிரிக்கல்" வீடியோ!

"அல்லு சில்லு செதறனும்டா".. மிரட்டும் மெர்சல் "லிரிக்கல்" வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ் சினிமாவில் அடுத்த பெரும் எதிர்ப்பார்ப்பு 'மெர்சல்' படத்தின் மீது தான். அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு எனப் பலர் நடித்துள்ள இப்படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

இப்படத்தைப் பற்றி தினசரி புதிதுபுதிதாக அப்டேட்டுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், 'மெர்சல்' படத்தின் லிரிக்கல் வீடியோ சற்றுமுன்பு வெளியாகி இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 'மெர்சல்' பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

இப்படத்தின் நீதானே நீதானே... பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியிருக்கிறார்கள். விஜய், சமந்தா இருவரும் டூயட் பாடும் இந்தப் பாடல் ரொமான்டிக் பாடலை விரும்பும் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்.

'மெர்சல்' படத்தின் மெர்சல் அரசன் பாடல் வழக்கமான விஜய் படங்களில் வருவதுபோலவே ஒரு கொண்டாட்ட வரிசைப் பாடல். இந்தப் பாடலை ஜி.வி.பிரகாஷ், நரேஷ் ஐயர் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல்களை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் வெளியானதும், ட்விட்டரில் மீண்டும் #Mersal ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

English summary
'Mersal' lyrical video songs are out now offficially. These songs are composed by A.R.Rahman.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil