»   »  'மெர்சல்' படத்தில் இன்னொரு பாடல்! - விரைவில் வெளியாகும்

'மெர்சல்' படத்தில் இன்னொரு பாடல்! - விரைவில் வெளியாகும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வரவிருக்கும் 'மெர்சல்' படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை இந்தப் படத்தின் டைட்டில் பிரச்னை எப்படியும் முடிவுக்கு வந்துவிடும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பாடலாசிரியர் விவேக், ஒரு சர்ப்ரைஸை அறிவிப்பதாகக் கூறியிருந்தார், தற்போது அவர் அதை வெளியிட்டுள்ளார்.

இசை வெளியீட்டு விழாவில் வெளியிட்டது போக 'மெர்சல்' படத்தில் மேலும் ஒரு பாடல் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் விவேக்.

வித்தியாசமான முயற்சி

இந்த பாடல் மேஜிக் கலைஞர் விஜய்க்காக உருவாக்கப்பட்டது. மேஜிக் கான்செப்டை பாடலில் பயன்படுத்தியிருப்பதாகவும், வித்தியாசமான முயற்சியை செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். விரைவில் அது வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

மெர்சல் பண்ணுங்க

ஏற்கெனவே 4 பாட்டுகளைக் கேட்டே மெர்சால் ஆகிட்டோம். இதுல அஞ்சாவது வேற... நீங்க மெர்சல் பண்ணுங்க தலைவரே..!

பாட்டு வரி போஸ்ட்

அதான் நிறைய வெச்சிருக்கீங்களே.. ஒரு லைன் போஸ்ட் பண்ணலாமே..!

எல்லாமே சூப்பர்

எப்படி ப்ரதர் இப்படிலாம்... உங்க லிரிக்ஸ் எல்லாமே அவுட்ஸ்டாண்டிங் கரன்ட் ட்ரெண்ட் + க்ளாசிக்ஸ். எல்லாமே சூப்பர்!

வடிவேலு பிறந்தநாள்

ஃபர்ஸ்ட் லுக்கும், செகண்ட் லுக்கும் விஜய் பிறந்தநாளுக்கு ரிலீஸ் ஆச்சு... டீசர் அட்லீ பிறந்தநாளுக்கு ரிலீஸ் ஆச்சு... அக்டோபர் 10-ம் தேதி வடிவேலு பிறந்தநாளுக்கு..?

அப்டேட்

இதுதான் நீங்க சொன்ன அந்த அப்டேட்டா சார்..?

ஏமாற்றம்

தளபதி விஜய் இந்தப் பாடலைப் பாடியிருப்பதாக அறிவிப்பு வரும் என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

English summary
Vijay's upcoming 'Mersal' movie has created a lot of expectations among fans. Lyricist Vivek says that there is a new song in the movie 'Mersal'.
Please Wait while comments are loading...