»   »  கூகுள் டிரெண்ட்ஸில் முதலிடத்தை பிடித்த ஆளப்போறான் தமிழன்

கூகுள் டிரெண்ட்ஸில் முதலிடத்தை பிடித்த ஆளப்போறான் தமிழன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கூகுள் டிரெண்ட்ஸில் ஆளப்போறான் பாடல் கடந்த வாரம் முதலிடத்தில் இருந்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆளப்போறான் தமிழன் பாடல் மட்டும் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

Mersal song gets first place in Google trends

பாடல் ரிலீஸான வேகத்தில் அதை ட்விட்டரில் டிரெண்டாகவிட்டார்கள் விஜய் ரசிகர்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இன்னும் எதிர்பார்த்தோம் பரவாயில்லை மற்ற பாடல்கள் வரட்டும் என்று சில ரசிகர்கள் காத்துள்ளனர்.

இந்நிலையில் ஆளப்போறான் பாடலை கூகுளில் ஏகப்பட்ட பேர் தேடியுள்ளனர். விளைவு கூகுள் டிரெண்ட்ஸில் கடந்த வாரம் மெர்சல் பாடல் என்ற வார்த்தை முதலிடத்தை பிடித்துள்ளது.

இதை கூகுள் இந்தியாவே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

English summary
Mersal song has got the first place in Google trends last week after Aalaporan Tamizhan song got released.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil