»   »  ரசிகர்கள் எதிர்பார்த்த விஜய்யின் 'மெர்சல்' டீசர் இதோ! #MersalTeaser

ரசிகர்கள் எதிர்பார்த்த விஜய்யின் 'மெர்சல்' டீசர் இதோ! #MersalTeaser

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரசிகர்கள் எதிர்பார்த்த விஜய்யின் 'மெர்சல்' டீசர் இதோ!-வீடியோ

சென்னை : அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு ஆகியோர் நடிக்கும் திரைப்படம் 'மெர்சல்'. 'மெர்சல்' விஜய்யின் 61 -வது படம்.

கடந்த ஜூன் மாதம் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி இப்படத்தின்ன் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.

தினம் ஒரு அப்டேட்ஸ் :

தினம் ஒரு அப்டேட்ஸ் :

விஜய் ரசிகர்களுக்காக 'மெர்சல்' படத்தின் அப்டேட்டுகளை அவ்வப்போது கொடுத்து உற்சாகமாக்கி வருகிறது படக்குழு. படத்தின் சிங்கிள் ட்ராக் ஆடியோ, லிரிக்கல் வீடியோ ஆகியவை தனித்தனியாக வெளியிடப்பட்டு ஹைப் ஏற்றின.

மெர்சல் போஸ்டர்கள் :

மெர்சல் போஸ்டர்கள் :

'மெர்சல்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலை ஜல்லிக்கட்டு காளையின் வடிவத்தில் உருவாக்கி லைக்ஸ் அள்ளியது 'மெர்சல்' டீம். அதைத் தொடர்ந்து செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. நேற்று வெளியான போஸ்டரில் விஜய், நித்யா மேனன் குழந்தை மற்றும் காளையுடன் இடம்பெற்றிருக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களைத் தெறிக்க விட்டது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு :

ரசிகர்கள் எதிர்பார்ப்பு :

டீஸர் எப்போது வரும் என படத்தின் இயக்குநர் அட்லீயையும், தயாரிப்பாளர் ஹேமா ருக்மணியையும் ட்விட்டரில் துளைத்தெடுத்து வந்தனர் ரசிகர்கள். இந்நிலையில், 21-ம் தேதி மாலை 6 மணிக்கு டீஸர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து பரபரப்பு தொற்றிக்கொண்டது.

டீஸர் வெளியீடு :

இதோ, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'மெர்சல்' படத்தின் டீஸர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. விஜய் மூன்று கெட்டப்களில் இருக்கும் காட்சிகளும் இந்த டீசரில் இடம்பெற்றிருக்கின்றன.

English summary
Actor Vijay, Kajal Agarwal, Samantha and Vadivelu are playing in the movie 'Mersal'. In this case, the teaser of the film was officially released.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil