»   »  விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தது இதோ வந்திடுச்சு..! #Mersal

விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தது இதோ வந்திடுச்சு..! #Mersal

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பல தடைகளைக் கடந்து நேற்று வெளியான 'மெர்சல்' திரைப்படம் ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வசூலைக் குவித்து வருகிறது.

'மெர்சல்' படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே உற்சாகமான ரசிகர்கள் படத்தின் டீசர், போஸ்டரை பயங்கர ஹிட்டாக்கியதோடு இல்லாமல் படத்தையும் செம சூப்பர்ஹிட் ஆக்கியுள்ளார்கள்.
'மெர்சல்' படத்தின் பாடல்களின் வீடியோக்களை எப்போது வெளியிடுவீர்கள் என தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் ஹேண்டிலில் விஜய் ரசிகர்கள் கேட்டு வந்தனர். விரைவில் வெளியாகும் என தேனாண்டாள் பிலிம்ஸ் சி.இ.ஓ ஹேமா ருக்மணி பதிலளித்திருந்தார்.

Mersal video song released

'மெர்சல்' படக்குழுவின் வெறித்தன உழைப்பால் மெர்சல் அரசன் உலகம் முழுவதும் கெத்து காட்டி வருகிறார். இந்நிலையில், படத்தில் இடம்பெற்ற 'ஆளப் போறான் தமிழன்' பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் யூ-ட்யூபில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இனி ஒவ்வொன்றாக வெளியாகும் எனக் கருதப்படுகிறது. முழுப்பாடலும் விரைவில் வெளியாகும். 'மெர்சல்' தெலுங்கு பதிப்பான 'அதிரிந்தி' HD ப்ரின்டாக இப்போதே ஆன்லைனில் கிடைக்கிறது. தெலுங்கு மெர்சலையும் விஜய் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

English summary
A minute of Aalaporaan thamizhan video song was released officially. 'Mersal''s other songs will be released soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X