»   »  டி20 மேட்ச்ல 300 ரன் அடிச்ச மாதிரி இருக்கும் மெர்சல்! - அட்லீ

டி20 மேட்ச்ல 300 ரன் அடிச்ச மாதிரி இருக்கும் மெர்சல்! - அட்லீ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் படம் குறித்துப் பேசியுள்ளார் இயக்குநர் அட்லீ.

அவர் கூறுகையில், "நானும் விஜய்யும் இணைந்த முதல் படம் தெறி, 50 போட்டியில் 300 ரன்கள் அடிச்ச மாதிரி இருந்தது. இப்போது மெர்சல். இந்தப் படம் டி 20 போட்டியில் 300 ரன்கள் அடிச்ச மாதிரி இருக்கும். குறிப்பாக கிராமத்து இளைஞராக விஜய் வரும் காட்சிகள் செம மாஸாக இருக்கும்.

Mersal will give an interesting T20 match feel - Atlee

இந்தப் படத்தின் கதைக்கு இன்ஸ்பிரேஷன் என்னன்னு நிறைய பேர் கேட்கிறாங்க.. இசையில் ஆதாரம் ஏழு ஸ்வரங்கள்தான். இன்னும் 100 ஆண்டுகள் இளையராஜா சார் அல்லது ரஹ்மான் சார் பாதிப்பு இல்லாமல் இசையே இருக்காது. ஏன், இப்போதே அப்படித்தான்.

எனவே ஏதாவது ஒரு கதை அல்லது படத்தின் சாயல் இருப்பதைத் தவிர்க்க முடியாது," என்றார்.

English summary
Director Atlee says that Vijay's Mersal would be an interesting T20 match

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil