»   »  'மெட்ரோ' சூப்பர் ஹிட்டாமே... 'சக்சஸ் மீட்' வைத்துக் கொண்டாடிய படக் குழு!

'மெட்ரோ' சூப்பர் ஹிட்டாமே... 'சக்சஸ் மீட்' வைத்துக் கொண்டாடிய படக் குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வெள்ளியன்று வெளியான 'மெட்ரோ' படத்தின் வெற்றியை படக் குழுவினர் சக்சஸ் மீட் வைத்துக் கொண்டாடினர்.

சிரிஷ், பாபி சிம்ஹா, சென்ராயன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த 'மெட்ரோ' படத்துக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளதாக அப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


ஆள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள இரண்டாவது படம் மெட்ரோ.


Metro Movie Success Meet

சென்னை போன்ற பெரு நகரங்களில் நடைபெறும் செயின் பறிப்பை பற்றிய படமென்பதால், தணிக்கைக் குழுவினர் இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தர மறுத்தனர்.


கடைசியில் மறுதணிக்கை செய்யப்பட்டு 'ஏ' சான்றிதழுடன் இப்படம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை படக் குழுவினர் சக்சஸ் மீட் வைத்துக் கொண்டாடினர். ஆனால் இது எந்த மாதிரி வெற்றி, வசூல் நிலவரம் போன்ற விவரங்கள் எதையும் சொல்லாமலே கொண்டாடி முடித்தனர்.


இந்த சக்சஸ் மீட்டில் நடிகர் பாபி சிம்ஹா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் வெளியாகும் முன்பே இப்படத்தின் கன்னட ரீமேக் நல்ல விலைக்கு விற்கப்பட்டது.


Metro Movie Success Meet

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கான பேச்சுவார்த்தைகளும் தற்போது நடைபெற்று வருவதாகக் கூறுகின்றனர். சமீபத்தில் மெட்ரோவைப் பார்த்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் தெலுங்கில் இப்படத்தை ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனராம்.


தெலுங்கில் ரீமேக் செய்தால், நாக சைதன்யா ஹீரோவாகவும், தமிழில் ஹீரோவாக நடித்த சிரிஷ் வில்லனாகவும் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

English summary
Bobby Simha, Shirish Starrer Metro Movie Success Meet Recently held in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil