இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல்!
சென்னை: புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்பு இன்று குறிப்பிட்ட சில அரங்குகளில் இன்று சிறப்புத் திரையிடல் நடைபெற உள்ளது.

இன்று ஜனவரி 17, எம்ஜிஆரின் 100வது பிறந்த நாள் தொடக்க விழா.
இதையொட்டி, ஆயிரத்தில் ஒருவன் படத்தை சென்னையில்
அபிராமி 7Star
சத்யம் சினிமாஸ்
Escape
S2 Thiuvanmiyur
S2 Perambur
Palazzo Vadapalani
கோயம்புத்தூரில்...
S2 - Coimbatore
Thaai Cine V K Puram
ஆகிய அரங்குகளில் ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல் இன்று நடக்கிறது.
1965-ல் பிஆர் பந்துலு இயக்கத்தில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். மிகப் பெரிய வெற்றிப் பெற்ற இந்தப் படம் 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் டிஜிட்டலில் வெளியாகி வெள்ளி விழா கொண்டாடியது.


Click it and Unblock the Notifications











