»   »  குறைந்த செலவில் சினிமா படிக்க... அழைக்கிறது அரசு திரைப்படக் கல்லூரி!

குறைந்த செலவில் சினிமா படிக்க... அழைக்கிறது அரசு திரைப்படக் கல்லூரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைய தேதிக்கு திரைப்பட பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள் சென்னையைச் சுற்றிலும் எக்கச்சக்கமாக முளைத்துவிட்டன. கட்டணமோ பகல் கொள்ளை. பத்து லட்சம், பதினைந்து லட்சம் என்று போகிறது. இவற்றிலெல்லாம் சினிமாவைக் கற்றுக் கொள்ள முடியாது. காரணம் மோசமான உள்கட்டமைப்பு வசதி. சரியான, அனுபமிக்க பயிற்றுநர்கள் இல்லாமை.

ஆனால் அரசு திரைப்படக் கல்லூரி அப்படியல்ல. பரந்து விரிந்த நிலப்பரப்பில், சகல வசதிகளோடும் அமைந்துள்ளது. பல ஆண்டு அனுபவம் மிக்க பயிற்றுநர்கள், ஏகப்பட்ட உள், வெளிநாட்டுத் திரைப் படங்கள், புத்தகங்கள் அடங்கிய பிரமாதமான லைப்ரரி... எல்லாவற்றையும் விட, மிகக் குறைந்த கட்டணம்.

MGR Film Institute announces admission

இந்த அரசு திரைப்படக் கல்லூரியில் சேருவது மட்டுமே மாணவர்களுக்கு பலன் தரும். இதோ இந்த ஆண்டுக்கான அரசின் சேர்க்கை அறிவிப்பு:

"எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, டிஜிட்டல் இண்டர்மீடியட், இயக்கம், திரைக்கதை அமைப்பு, எடிட்டிங், அனிமேஷன், விஷுவல் எபெக்ட் ஆகிய பாடத் திட்டத்தின் கீழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த படிப்புகளின் 2017 மற்றும்18ம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலைத்துறையில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் இதில் சேரலாம். இதற்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் இணைய தளத்தில் பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தியாவில் உள்ள 3 திரைப்படக் கல்லூரிகளில் அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே கல்லூரி எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரி மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது".

இவ்வாறு அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு:

English summary
M.G.R. GOVERNMENT FILM AND TELEVISION INSTITUTE, Chennai has announced students admission for the year 2017-18.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil