விஜய் 66 படத்தில் இணையும் வெள்ளிவிழா நாயகன்... சூப்பர் காம்பினேஷனா இருக்கே?

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் கடந்த 5 நாட்களில் 200 கோடி ரூபாயை சர்வதேச அளவில் வசூலித்துள்ளது. விமர்சனங்கள் குறித்தெல்லாம் கவலைப்படாமல் தனது அடுத்தப் படத்தின் சூட்டிங்கில் தற்போது கலந்துக் கொண்டுள்ளார் விஜய்.

நடிகர் விஜய்யின் பீஸ்ட்

நடிகர் விஜய்யின் பீஸ்ட்

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 13ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது பீஸ்ட். மாஸ்டர் படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இந்தப் படம் உள்ளானது. அதற்கேற்ப பிரமோஷன்களும் சிறப்பாக அமைந்தன. படத்தின் பாடல்கள், ட்ரெயிலர், தீம் பாடல்களை அடுத்தடுத்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.

தொடர் ட்ரெண்டிங்கில் பாடல்கள்

தொடர் ட்ரெண்டிங்கில் பாடல்கள்

இவையனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இவை இருந்தன. ரசிகர்கள் அரபிக்குத்து மற்றும் ஜாலிலோ ஜிம்கானா பாடல்களை கொண்டாடினர். கோடிக்கணக்கான வியூஸ்களை இந்தப் பாடல்கள் பெற்றன. படத்தின் ப்ரமோக்களும் சிறப்பான வரவேற்பை பெற்றன.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

படம் கடந்த 13ம் தேதி ரிலீசாகிய நிலையில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. ஆயினும் விஜய் படம் என்பதாலேயே இந்தப் படம் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. படம் கடந்த 5 நாட்களில் 200 கோடி ரூபாயை வசூலித்து மாஸ் காட்டியுள்ளது.

முந்தைய சாதனைகளை பீட் செய்த பீஸ்ட்

முந்தைய சாதனைகளை பீட் செய்த பீஸ்ட்

மேலும் விஜய்யின் முந்தைய சாதனைகளையும் இந்தப் படம் பீட் செய்துள்ளது. அவரது மாஸ்டர் உள்ளிட்ட படங்களின் வரிசையில் இந்தப் படமும் 200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. கோலிவுட்டில் 200 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ள அவரது 5வது படம் என்ற சாதனையை பீஸ்ட் பெற்றுள்ளது.

கவலை கொள்ளாத விஜய்

கவலை கொள்ளாத விஜய்

பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. ஆனால் இவை குறித்தெல்லாம் கவலைக் கொள்ளாமல் தனது அடுத்தப் படத்தின் சூட்டிங்கில் தற்போது இணைந்துள்ளார் நடிகர் விஜய். விஜய் 66 என்ற அந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியுள்ளது.

விஜய்க்கு தந்தையான சரத்குமார்

விஜய்க்கு தந்தையான சரத்குமார்

படத்தை வம்சி இயக்கிவரும் நிலையில் படம் தமிழ், தெலுங்கில் உருவாகி வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. தில் ராஜு படத்தை தயாரித்து வருகிறார். படத்தில் சரத்குமார் விஜய்க்கு அண்ணனாக நடிப்பதாக முதலில் கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் தந்தையாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

அண்ணனாகும் மைக் மோகன்?

அண்ணனாகும் மைக் மோகன்?

படத்தில் விஜய்க்கு இரண்டு அண்ணன்கள் என்றும் அதில் பிரகாஷ் ராஜ் ஒருவர் என்றும் கூறப்படுகிறது. இரண்டாவது அண்ணன் குறித்த எந்தத் தகவலும் இல்லாத நிலையில் தற்போது அந்த கேரக்டரில் 80களின் வெள்ளி விழா நாயகன் மைக் மோகன் இணையவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஹரா நாயகன்

ஹரா நாயகன்

80களில் அனைவரது பேவரிட் நடிகராக இருந்தவர் மைக் மோகன். இவரது அனைத்து படங்களும் வெள்ளிவிழா படங்களாக அமைந்தன. இதனிடையே, நீண்ட காலங்களாக படங்களில் நடிப்பதில் கேப் விட்டிருந்த மைக் மோகன், தற்போது ஹரா என்ற படத்தின்மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே இவர் விஜய்யுடன் இணைவது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X