மிரள் திரைப்படம் என் 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு திருப்புமுனையாக இருக்கும்... பரத் நெகிழ்ச்சி

சென்னை: இந்த வார இறுதியில் வெளியாகவுள்ள மிரள் திரைப்படத்தின் புரமோஷனல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

காதல் பரத் என்று தன் பெயருடன் இருக்கும் அடை மொழியை மிரள் திரைப்படம் உடைத்து மிரள் பரத் என்று தன்னை அழைக்க வைக்கும் என்று உறுதியாக நம்புகிறார்.

ஒரு பேட்டியில் இயக்குநர் சங்கர், மிரள் திரைப்படம், 19 ஆண்டு கால பயணம் குறித்து பல சுவாரசியமான தகவல்கள் பற்றி கூறியிருக்கிறார் பரத்.\

மிரள்

மிரள்

சமீபகாலமாக நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் பரத் இந்த முறை மிரள் படத்தில் நடித்துள்ளார். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ராட்சசன், மரகத நாணயம் போன்ற தரமான திரைப்படங்களை கொடுத்துள்ள ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பு நிறுவனமும் சேர்ந்து மிரள் படத்தை தயாரித்துள்ளது.

புதிய கதைக் களம்

புதிய கதைக் களம்

தமிழ் சினிமாவில் முதன்முறையாக காற்றாலை உள்ள பகுதியில் பெரும்பாலான காட்சிகள் படப்பிடிக்கப்பட்ட படம் என்ற பெருமையை பெற்றுள்ளது மிரள். சென்ற வாரம் நடைபெற்ற இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட படத்தின் செட்டை அப்படியே நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திற்குள் கொண்டு வந்து, வந்திருந்த அனைவருக்கும் படத்தில் வரக் கூடிய திகில் மாஸ்க்கை கொடுத்து அசத்தலாக படத்தை புரமோட் செய்தார்கள் படக் குழுவினர்.

சங்கர் அறிவுரை

சங்கர் அறிவுரை

நடிகர் பரத் சினிமாவிற்கு வந்து 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் ஐந்து ஆண்டுகள் கொண்டாட்டம், பத்து ஆண்டு கொண்டாட்டம் என உங்களுக்கு பின் வந்த நடிகர்கள் கொண்டாடும்போது அதை நினைத்து வருத்தப்பட்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு, கண்டிப்பாக வருத்தம் இருக்கும். ஆனால் அதையெல்லாம் கடந்து வர வேண்டும், சினிமா அப்படித்தான் இயங்கும். பிறரை பற்றி யோசித்தால் உன்னுடைய வளர்ச்சி கெட்டுப் போய்விடும், அதனால் பிறரை பற்றி யோசிக்காதே உன்னைப் பற்றி மட்டும் யோசி என்று இயக்குநர் சங்கர் எனக்கு அடிக்கடி அறிவுரை கூறுவார்.

திருப்பு முனை

திருப்பு முனை

அதனால் அந்தப் பக்குவத்தை பெற்றுவிட்டேன். அது மட்டுமின்றி, எனக்கு பிறகு வந்த நடிகர்களில் நிறைய பேர் என்னை விட வயதில் மூத்தவர்கள். ஆனால் நான் சிறு வயதிலேயே சினிமாவிற்கு வந்து 19 ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஏதோ எனக்கு வயதானது போல் ஒரு பிம்பம் இருக்கிறது. அப்படி இல்லை, இன்னும் நான் இளமையாகத்தான் இருக்கிறேன், நல்ல படங்களை தேர்வு செய்துதான் நடிக்கிறேன், மிரள் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை கொடுத்து நான் இருபது ஆண்டு கால பயணத்தை கொண்டாட வழிவகுக்கும் என்று உறுதியாக நம்புவதாக பரத் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X