»   »  சத்யராஜ் விவகாரம்: ட்விட்டரில் விஜய்க்கு எதிராக விஷமம்

சத்யராஜ் விவகாரம்: ட்விட்டரில் விஜய்க்கு எதிராக விஷமம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 விஷயத்தில் யாரோ இளைய தளபதி விஜய்யின் பெயரை பயன்படுத்தி விஷமம் செய்துள்ளனர்.

காவிரி போராட்டத்தின்போது கன்னடர்களுக்கு எதிராக பேசிய சத்யராஜ் மன்னிப்பு கேட்காத வரை பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் தெரிவித்தன.

சத்யராஜ் நிச்சயம் மன்னிப்பு கேட்க மாட்டார் என சமூக வலைதளங்களில் தமிழர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் படத்திற்கு தன்னால் எந்த பாதிப்பும் வரக் கூடாது என்று சத்யராஜ் கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Miscreants tweet against Vijay

இதற்கிடையே யாரோ இளைய தளபதி விஜய்யின் பெயரை பயன்படுத்தி விஷமம் செய்துள்ளனர். அவரது ட்விட்டர் கணக்கு போன்றே போட்டோஷாப் செய்து அவர் வெளியிட்டது போல கூறுயிருப்பதாவது,

கன்னடர்களை எச்சரிக்கிறேன்...
சத்யராஜ் எனக்கு தந்தை போன்றவர்..
மன்னிப்புக்கு பதிலாக மண்ணை
அள்ளி திண்ணுங்கள்..
#JusticeForSathyaraj

என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை விஜய் தான் ட்வீட்டியுள்ளார் என்று கன்னட ஊடகங்கள் வேறு செய்தி வெளியிட்டுள்ளன. விஜய் அவர் பாட்டுக்கு விஜய் 61 படத்தில் நடித்துக் கொண்டிருக்க யாரோ இந்த வேலையை செய்துள்ளனர்.

English summary
Miscreants have dragged Actor Vijay's name in Baahubali issue involving actor Sathyaraj.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil