“க்யூட் போட்டோவுடன் Missing Hubby”: இன்ஸ்டாவில் விராட் கோலிக்காக உருகிய அனுஷ்கா ஷர்மா

லண்டன்: பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மா தற்போது சக்தா எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து வருகிறார்.

சக்தா எக்ஸ்பிரஸ் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றுள்ள அனுஷ்கா ஷர்மா விராட் கோலியை நினைத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

விராட் கோலியுடன் இருக்கும் போட்டோவுடன் அனுஷ்கா ஷர்மா ஷேர் செய்துள்ள இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.

நட்சத்திர காதல் ஜோடி

நட்சத்திர காதல் ஜோடி

2006ல் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ரப் நே பனா தி ஜோடி' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் அனுஷ்கா ஷர்மா. தொடர்ந்து 'பத்மாஷ் கம்பேனி', 'பாட்டியாலா ஹவுஸ்', அமீர் கானுடன் 'பீகே' போன்ற படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கே சென்றார். அதேநேரம் கிரிக்கெட்டில் தனது அதிரடியான ஆட்டத்தால், உலகின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவராக உயர்ந்தார் விராட் கோலி. இருவருமே ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

திருமண வாழ்கையில் அனுஷ்கா

திருமண வாழ்கையில் அனுஷ்கா

விராட் கோலியை அனுஷ்கா ஷர்மா காதலித்து வந்தது பாலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தியது. இவர்களது திருமணம் 2017ம் ஆண்டில் கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பரி, சஞ்சு, ஜீரோ ஆகிய படங்களில் நடித்த அனுஷ்கா ஷர்மா, குழந்தை பிறந்த பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். அதேநேரம் விராட் கோலி தொடர்ந்து கிரிக்கெட்டில் கலக்கி வருகிறார். நாளை மறுநாள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விராட் கோலி ஆடவுள்ளார்.

லண்டன் சென்ற அனுஷ்கா ஷர்மா

லண்டன் சென்ற அனுஷ்கா ஷர்மா

இந்நிலையில், அனுஷ்கா ஷர்மா நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அனுஷ்கா ஷர்மாவின் சகோதரர் கர்ணேஷ் ஷர்மா 'சக்தா எக்ஸ்பிரஸ்' என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை பின்னணியில் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமாக இது உருவாகிறது. இந்தப் படத்தில் ஜூலன் கோஸ்வாமி கேரக்டரில் அனுஷ்கா ஷர்மா நடித்து வருகிறார். இதனையடுத்து லண்டனில் நடைபெற்றுவரும் 'சக்தா எக்ஸ்பிரஸ்' படத்தின் ஷூட்டிங்கில் அனுஷ்கா ஷர்மா கலந்துகொண்டுள்ளார்.

விராட் கோலியை நினைத்து உருக்கம்

விராட் கோலியை நினைத்து உருக்கம்

'சக்தா எக்ஸ்பிரஸ்' படப்பிடிப்புக்காக லண்டன் சென்றுள்ள அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார், அதில் தனது கணவர் விராட் கோலியுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள அவர் "கோலியுடன் இருக்கும் போது உலகம் பிரகாசமாகவும் உற்சாகமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. ஒட்டு மொத்தமாக மிக அழகாகத் தெரிகிறது" என பதிவிட்டுள்ளார். மேலும், 'Missing Hubby' என்ற கேப்ஷனையும் தனது இன்ஸ்டா போஸ்ட்டில் பதிவிட்டுள்ளார். அனுஷ்காவின் இந்தப் பதிவை கோலியின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X