செல்வராகவனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுத்த செம சர்ப்ரைஸ்.. குடும்பத்தினருடன் க்ரூப் போட்டோ!

சென்னை: இயக்குநர் செல்வராகவன் குடும்பத்துடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்துக் கொண்ட புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

நானே வருவேன் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் இயக்குநர் செல்வராகவன் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார் மு.க. ஸ்டாலின்.

அப்போது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் செல்வராகவன்.

நடிப்பும் இயக்கமும்

நடிப்பும் இயக்கமும்

இயக்குநராக பல ஆண்டுகள் ஏகப்பட்ட சிறப்பான படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்து வந்த செல்வராகவன் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சாணிக் காயிதம் படத்தில் தனது அசுரத்தனமான நடிப்பால் மிரட்டி இருந்தார். நானே வருவேன் படத்தை இயக்கி அதில், தனது தம்பியுடன் சேர்ந்து நடித்தும் உள்ளார்.

நானே வருவேன் ரிலீஸ்

நானே வருவேன் ரிலீஸ்

வரும் வியாழக்கிழமை செப்டம்பர் 29ம் தேதி தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள நானே வருவேன் திரைப்படம் வெளியாக உள்ளது. வித்தியாசமான சைக்காலாஜிக்கல் த்ரில்லர் படமாக இந்த படம் உருவாகி உள்ளது என்றும் நிச்சயம் செல்வராகவனுக்கு ஒரு சரியான கம்பேக் படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ப்ரைஸ் கொடுத்த முதலமைச்சர்

சர்ப்ரைஸ் கொடுத்த முதலமைச்சர்

இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் வீட்டுக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்வராகவன் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. திடீர் விசிட் அடித்து செல்வராகவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் முதலமைச்சர் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் நானே வருவேன் இயக்குநர்.

தனுஷ் இல்லை

தனுஷ் இல்லை

நடிகர் தனுஷ் இந்த சந்திப்பில் இல்லாத நிலையில், இது நானே வருவேன் படத்தை முன்னிட்ட சந்திப்பு இல்லை என்றும் நட்பு ரீதியான சந்திப்பு தான் இது எனக் கூறப்படுகிறது. இயக்குநர் செல்வராகவன், அவர் மனைவி கீதாஞ்சலி மற்றும் அவரது குடும்பத்தினர் இருக்கும் இந்த புகைப்படம் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

பொன்னியின் செல்வன் உடன் போட்டி

பொன்னியின் செல்வன் உடன் போட்டி

சோழர்களின் பெருமையை பேசிய ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கிய இயக்குநர் செல்வராகவன் சோழர்களின் வரலாற்று படமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கே போட்டியாக மாறி உள்ளது ஏன் என்கிற கேள்வியை தொடர்ந்து ரசிகர்கள் வைத்து வருகின்றனர். தசரா விடுமுறை என்பதால் இரு படங்களும் வசூல் குவிக்கும் என்கிற நிலையில் தான் நானே வருவேன் படத்தை செல்வராகவன் மற்றும் தாணு இயக்க முடிவு செய்துள்ளனர் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X