»   »  விபத்து... பிரபல மாடல் அழகி சோனிகா சிங் மரணம்.. நடிகர் விக்ரமுக்கு காயம்!

விபத்து... பிரபல மாடல் அழகி சோனிகா சிங் மரணம்.. நடிகர் விக்ரமுக்கு காயம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: பிரபல மாடல் அழகி சோனிகா சிங் சௌஹான் கொல்கத்தாவில் நடந்த கார் விபத்தில் மரணமடைந்தார். அவருடன் காரில் சென்ற நடிகர் விக்ரம் சாட்டர்ஜி பலத்த காயமடைந்தார்.

இந்த விபத்து இன்று அதிகாலை 4 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ராஷ்பேஹரி பகுதியில் நடந்தது.

Model Sonika Singh died in Road accident

அதிகாலையில் மிக வேகத்துடன் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் மோதியதாகவும், பின்னர் அருகிலிருந்த கடைகுள் புகுந்து நசுங்கியதாகவும் விபத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

நசுங்கிய காரிலிருந்து இருவரையும் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தபோது, சோனிகா சிங் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பலத்த அடிபட்ட விக்ரம் சாட்டர்ஜிக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

Model Sonika Singh died in Road accident

குடிபோதையில் விக்ரம் சாட்டர்ஜி காரை ஓட்டினாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விக்ரம் சாட்டர்ஜி வங்காள, தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.

English summary
Model Sonika Singh Chouhan was died in a road accident near Kolkata.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil