»   »  பெண்களுக்கு ஏற்ற ரோல் மாடல் மோடியாம்: சொல்கிறார் சர்ச்சை நடிகை

பெண்களுக்கு ஏற்ற ரோல் மாடல் மோடியாம்: சொல்கிறார் சர்ச்சை நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பெண்களுக்கு ஏற்ற ரோல் மாடல் பிரதமர் நரேந்திர மோடி என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்கிறார். மனதில் பட்டதை பளிச்சென்று பேசி பலரின் எதிர்ப்பை சம்பாதிக்கிறார்.

இந்நிலையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது,

வளர்ச்சி

வளர்ச்சி

என் வாழ்க்கையில் முன்னேற்றத்தை பார்க்க விரும்புகிறேன். இந்தியா வளராவிட்டால் நான் வளர முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். நான் ஒரு இந்தியன். அதை தவிர எனக்கு வேறு அடையாளம் இல்லை.

ரசிகை

ரசிகை

நான் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகை. நம் நாட்டு பெண்களுக்கு ஏற்ற ரோல் மாடல் அவர் தான். டீ விற்றவர் பிரதமர் ஆகியுள்ளார் என்றால் அது அவரின் வெற்றி அல்ல ஜனநாயகத்தின் வெற்றி. அவர் தான் சரியான ரோல் மாடல்.

கலைஞர்

கலைஞர்

பாகிஸ்தான் கலைஞர்கள் இந்திய படங்களில் நடிக்கக் கூடாது என்று கூறுவது சரி அல்ல. தேசிய கீதத்தை கேட்டால் அமெரிக்கர்கள் எழுந்து நிற்கிறார்கள். நாம் ஏன் எழுந்து நிற்க வெட்கப்பட வேண்டும்?

புகார்

புகார்

நாட்டை பற்றி குறை சொல்வது ஒரு வழக்கமாகிவிட்டது. நம் நாட்டில் உள்கட்டமைப்பு சரியில்லை, அசுத்தமாக உள்ளது என்று இளைஞர்கள் புகார் கூறுகிறார்கள். சுத்தம் இல்லை என்றால் நீங்கள் ஏன் அதை சுத்தம் செய்யக் கூடாது? நீங்கள் என்ன விருந்தாளிகளா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் கங்கனா.

English summary
Bollywood actress Kangana Ranaut said that she is a big fan of PM Narendra Modi. She added that Modi is the perfect role model for women.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X