»   »  ஆதிவாசியாக மோகன்லால்... தெறிக்கும் சண்டைக் காட்சிகள் - 'ஒடியன்' அப்டேட்ஸ்

ஆதிவாசியாக மோகன்லால்... தெறிக்கும் சண்டைக் காட்சிகள் - 'ஒடியன்' அப்டேட்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன் தனது அடுத்த படமான 'ஒடியன்' பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார் மோகன்லால்.

மோகன்லாலின் சொந்த நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை, விளம்பரப்படங்களை இயக்கிய ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இயக்கவுள்ளார். கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடிக்க, முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.

மோகன்லாலின் 38 வருட திரையுலகில் அவர் ஏற்று நடிக்காத ஒரு கதாபாத்திரத்தைக் கொண்டதாக இந்தப் படம் இருக்கும் எனக் கூறியிருந்தார் இயக்குனர் ஸ்ரீகுமார்.

மந்திரவாதி :

மந்திரவாதி :

'ஒடியன்' என்றால் மந்திர தந்திரங்கள் அறிந்தவன் என அர்த்தமாம். தங்களது எதிரிகளை சமாளிப்பதற்காக ஒடியன் இன மக்கள் சில மந்திர தந்திரங்களைப் பயன்படுத்துவார்களாம். இந்தப் படத்தில் ஒடியனாக நடித்திருக்கிறார் மோகன்லால்.

உருமாறும் ஒடியன்கள் :

உருமாறும் ஒடியன்கள் :

எதிரிகளை அழிப்பதற்காக இரவு நேரங்களில் கிளம்பும் ஒடியன்கள் தங்களை வெவ்வேறு விதமான விலங்குகளாக உருமாற்றிக்கொள்ளவும் செய்வார்களாம். இப்படிப்பட்ட ஒரு மந்திர தந்திரவாதியாகத்தான் இந்தப்படத்தில் மோகன்லால் நடிக்க இருக்கிறாராம்.

புலி முருகனை மிஞ்சும் :

புலி முருகனை மிஞ்சும் :

மோகன்லாலின் இன்னொரு பரிமாணத்தை வெளிக்கொண்டு வரும் படமாக தற்போது காசி, பனாரஸ் பகுதிகளில் உருவாகி வருகிறது 'ஒடியன்'. 'புலி முருகன்' படத்தைவிட மிஞ்சும் பட்ஜெட்டில் தயாராகி வருகிறதாம். 'புலி முருகன்' படத்தை மிஞ்சும் வகையிலான சண்டைக்காட்சிகள் இந்தப்படத்தில் இடம் பெறுகின்றனவாம்.

சண்டைக் காட்சிகள் :

சண்டைக் காட்சிகள் :

சண்டைக்காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்த பீட்டர் ஹெய்ன், இதற்காகத் தன்னை தேடிவந்த இரண்டு பெரிய நடிகர்களின் படங்களையும் உதறித்தள்ளி விட்டாராம். இந்த வருடம் 'புலி முருகன்' படத்தில் சண்டைக்காட்சிகளுக்காக தேசிய விருது வாங்கிய பீட்டர் ஹெய்ன், 'ஒடியன்' படத்திற்கும் அதைவிட அதிக உழைப்பை தர முடிவு செய்துவிட்டார்.

50 நாள் கால்ஷீட் - பீட்டர் ஹெய்ன் :

50 நாள் கால்ஷீட் - பீட்டர் ஹெய்ன் :

'ஒடியன்' படத்தில் சண்டைக்காட்சிகளை சிறப்பாகக் காட்சிப்படுத்துவதற்காக மொத்தம் 5௦ நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள பீட்டர் ஹெய்னுக்கு நாள் ஒன்றுக்கு 3 லட்சம் வீதம் மொத்தம் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.

English summary
Mohanlal acts as ancient black magician in 'Oiyan' movie. Odiyan stunt scenes are tuned than 'Puli murugan' by peter hein.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X