Don't Miss!
- News
செங்கோட்டையனா?.. "கமலாலய கசப்பு".. இதெல்லாம் யார் கேட்டது.. ஒரே நாளில் 2 ரியாக்ஷன்.. கவனித்த பாஜக
- Lifestyle
உங்கள் தலைமுடிக்கு புரோட்டீன் உடனே தேவை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம்.. மீண்டும் டிரெண்டிங்கில் வந்த திரிஷ்யம் 2.. மாஸ் காட்டிய மோகன் லால்!
திருவனந்தபுரம்: மோகன் லால் பிறந்தநாளை முன்னிட்டு ஏசியா நெட் சேனலில் முதன்முறையாக ஒளிபரப்பான திரிஷ்யம் 2 திரைப்படம் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
Recommended Video
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான கிரைம் திரில்லர் படம் திரிஷ்யம் 2.
நான்
ஒரு
குயின்..
கிரீடத்துடன்
உள்ள
புகைப்படத்தை
பகிர்ந்த
சில்லுனு
ஒரு
காதல்
குட்டி
பாப்பா!
முதல் பாகத்தை போலவே 2ம் பாகத்திலும் தனது குடும்பத்தை காப்பாற்ற ஜார்ஜ் குட்டி போராடும் கதையை மிகவும் கச்சிதமாக உருவாக்கி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் வெற்றிப் பெற்று விட்டார் இயக்குநர்.

தெறி ஹிட்
அமேசான் பிரைமில் இந்த ஆண்டு வெளியான திரிஷ்யம் 2 திரைப்படம் சீட் எட்ஜ் திரில்லராக வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. 2013ம் ஆண்டு வெளியான திரிஷ்யம் படத்தின் ஈர்ப்பு கொஞ்சம் கூட குறையாமல் இரண்டாம் பாகத்திலும் ரசிகர்களை கடைசி வரை டென்ஷன் ஏற்றி கிளைமேக்ஸில் மோகன் லாலின் நடிப்பு மற்றும் திரைக்கதையால் வெற்றி பெற்றது.

தொலைக்காட்சியில் முதன்முறையாக
ஏசியாநெட் தொலைக்காட்சியில் கடந்த மே 21ம் தேதி மோகன் லாலின் பிறந்தநாளை முன்னிட்டு ப்ரீமியர் செய்யப்பட்டது திரிஷ்யம் 2. ஒடிடி தளங்களில் காணாத மக்கள் மற்றும் ஏற்கனவே பார்த்தவர்கள் என ஒட்டுமொத்தமாக திரிஷ்யம் 2வை அனைவரும் அந்த நாளில் கண்டு ரசித்தனர்.

டிஆர்பியில் முதலிடம்
கடந்த வாரம் மலையாள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானவற்றிலேயே அதிக இம்பிரஷன்களை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது திரிஷ்யம் 2 திரைப்படம் (6.5 மில்லியன்). சமூக வலைதளங்களில் மீண்டும் திரிஷ்யம் 2 ஹாஷ்டேகையும் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வைரலாக்கினார்.

டாப் சார்ட்
முதலிடத்தில் திரிஷ்யம் 2 திரைப்படம் டிஆர்பி ரேட்டிங்கை அள்ளிய நிலையில், அதனை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் ஏசியாநெட் சேனலின் பிரபல டிவி தொடரான பாடாத பைங்கிளி இடம்பெற்றுள்ளது. 3ம் இடத்தில் குடும்ப விளக்கு சீரியலும், 4ம் இடத்தில் மெளனராகம் சீரியலும் இடம்பெற்றுள்ளன.

பிக் பாஸுக்கு தடை
பிக் பாஸ் மலையாளம் சீசன் 3 நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அனுமதியின்றி தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்தியதாக பிக் பாஸ் வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். நடிகர் மோகன் லால் இந்த சீசனையும் தொகுத்து வழங்கிய நிலையில் பிக் பாஸுக்கு தடை விதிக்கப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.