»   »  5 மொழிகளில் ரூ 1000 கோடியில் மகாபாரதக் கதை... மோகன் லால் நடிக்கிறார்!

5 மொழிகளில் ரூ 1000 கோடியில் மகாபாரதக் கதை... மோகன் லால் நடிக்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எத்தனையோ முறை எத்தனையோ மொழிகளில் எடுக்கப்பட்ட மகாபாரதக் கதை, மீண்டும் ஒரு முறை சினிமாவில் வலம் வரப் போகிறது.

இந்த முறை 1000 கோடி செலவில், 5 முக்கிய மொழிகளில் இந்தப் படத்தை உருவாக்கப் போகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட நேற்று வந்துவிட்டது.

Mohanlal's Film on Mahabharata with Rs 1000 cr budget

மூத்த மலையாள எழுத்தாளரும், கதாசிரியருமான எம்.டி.வாசுதேவ நாயரின் 'இரண்டாம் ஊழம்' என்ற நாவலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகப் போகிறது.

ஐக்கிய அரபு நாட்டில் வசிக்கும் பி.ஆர்.ஷெட்டி என்ற தயாரிப்பாளர் இந்த நாவலை படமாக தயாரிக்க முன்வந்துள்ளார். இப்படத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்திற்கு மலையாளத்தில் 'மகாபாரதா-ரெண்டாம் ஊழம்' என்று பெயர் வைத்துள்ளார்கள். மகாபாரத்தில் பஞ்ச பாண்டவர்களில் இரண்டாவதாக வரும் பீமனின் பார்வையில் வைத்து இந்த கதை எழுதப்பட்டுள்ளது. அந்த பீமனாகத்தான் மோகன்லால் நடிக்கிறார்.

ஸ்ரீகுமார் மேனன் இப்படத்தை இயக்கும் இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படமாக்கவுள்ளனர். இதுதவிர, பிற இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் இப்படத்தை டப் செய்யப் போகிறார்களாம்.

அடுத்த ஆண்டு செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. 2020-ல் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பார் என்று தெரிகிறது.

English summary
A UAE-based Indian businessman is investing Rs 1,000 crore ($150 million) to produce India's biggest ever motion picture, 'The Mahabharata'. This magnum opus is being directed by noted ad man and advertising film maker V A Shrikumar Menon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil