»   »  மலையாள சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ.100 கோடி வசூலித்த புலிமுருகன்

மலையாள சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ.100 கோடி வசூலித்த புலிமுருகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள சினிமா வரலாற்றிலேயே ஒரு படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது என்றால் அது மோகன்லாலின் புலிமுருகன் தான்.

வைஷாக் இயக்கத்தில் மோகன்லால், கமலினி முகர்ஜி, லால் உள்ளிட்டோர் நடித்த படம் புலிமுருகன். ரூ. 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் கடந்த மாதம் 7ம் தேதி ரிலீஸானது.

படம் வெளியானதில் இருந்தே தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது.

ரூ.100 கோடி

ரூ.100 கோடி

மலையாள சினிமா வரலாற்றில் இதுவரை ஒரு படம் கூட ரூ. 100 கோடி வசூல் செய்தது இல்லை. இந்நிலையில் ரூ.100 கோடி வசூலித்து புலிமுருகன் புதிய சாதனை படைத்துள்ளது.

மோகன்லால்

மோகன்லால்

புலிமுருகன் படைத்துள்ள சாதனை குறித்து மோகன்லால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ரூ.100 கோடி வசூல் செய்த முதல் மலையாள படம் புலிமுருகன். இயக்குனர் வைஷாக், தயாரிப்பாளர் டோமிச்சன் முலகுப்படம், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், திரைக்கதை ஆசிரியர் உதயகிருஷ்ணா, ஒளிப்பதிவாளர் ஷாஜி, இசையமைப்பாளர் கோபி சுந்தர் மற்றும் மொத்த படக்குழுவினருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

நன்றி

நன்றி

புலிமுருகன் படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்களால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் மேல் ஆசிர்வதித்த கடவுளுக்கு நன்றி என மோகன்லால் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

சம்பளம்

சம்பளம்

இத்தனை நாட்களாக ரூ.3 கோடி சம்பளம் வாங்கி வந்தார் மோகன்லால். புலிமுருகன் சூப்பர் ஹிட்டாகியுள்ளதையடுத்து அவர் தனது சம்பளத்தை ரூ.3.5 கோடி முதல் ரூ.4 கோடியாக உயர்த்தியுள்ளார்.

English summary
Mohanlal's latest release Pulimurugan has become the first ever Malayalam movie to enter Rs. 100 crore club.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil