twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்ச்சையில் சிக்கிய மோகன்லாலின் மான்ஸ்டர் திரைப்படம்… அரபு நாடுகளில் ரிலீஸுக்கு தடை…

    |

    திருவனந்தபுரம்: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துள்ள 'மான்ஸ்டர்' திரைப்படம் வரும் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    வைசாக் இயக்கியுள்ள மான்ஸ்டர் திரைப்படத்தை, ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார்.

    இந்நிலையில், சென்சார் பிரச்சினையால் மான்ஸ்டர் திரைப்படம் வெளியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அந்த ஒரு கிக் ஷாட் போதும்.. யாரு மாஸுன்னு சொல்ல.. சிரஞ்சீவியை ட்ரோல் செய்யும் மோகன்லால் ரசிகர்கள்! அந்த ஒரு கிக் ஷாட் போதும்.. யாரு மாஸுன்னு சொல்ல.. சிரஞ்சீவியை ட்ரோல் செய்யும் மோகன்லால் ரசிகர்கள்!

    மோகன்லாலின் மான்ஸ்டர்

    மோகன்லாலின் மான்ஸ்டர்

    மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தற்போது 'மான்ஸ்டர்' படத்தில் நடித்துள்ளார். முன்னதாக மோகன்லாலின் 12த் மேன், ப்ரோ டேடி ஆகிய படங்கள் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியிருந்தன. இந்நிலையில், வைசாக் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'மான்ஸ்டர்' வரும் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை மலையாளத்தில் முதல் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த 'புலிமுருகன்' படத்தின் இயக்குநர் வைசாக் இயக்கியுள்ளார். மோகன்லாலின் த்ரிஷ்யம், 12த் மேன் படங்களை தயாரித்த ஆண்டனி பெரும்பாவூர், மான்ஸ்டர் படத்தையும் தயாரித்துள்ளார்.

    லக்கி சிங் மோகன்லால்

    லக்கி சிங் மோகன்லால்

    மோகன்லாலுடன் சித்திக், மஞ்சு லட்சுமி, ஹனி ரோஸ், கணேஷ் குமார், லீனா, சுதேவ் நாயர் உள்ளிட்ட பலர் மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளனர். லக்கி சிங் என்ற கேரக்டரில் மோகன்லால் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்வெஸ்டிகேஷன் க்ரைம் திரில்லரில் உருவாகியுள்ள மான்ஸ்டர் படத்திற்கு மோகன்லால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படம் வெளியாகும் அதேநாளில் (அக் 21) நிவின் பாலி நடித்துள்ள 'படவேட்டு' திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    சென்சாரில் சிக்கல்

    சென்சாரில் சிக்கல்

    இந்நிலையில், மான்ஸ்டர் திரைப்படம் வெளியாவதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. இந்தப் படத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து சில காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அரபு நாடுகளில் மான்ஸ்டர் படம் வெளியாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சென்சார் அமைப்பு இந்தப் படத்தை தடைசெய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். காரணம், கேரளாவைச் சேர்ந்த பெரும்பாலானோர் அரபு நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால், மான்ஸ்டர் படத்திற்கு அரபு நாடுகளில் கிடைக்கும் வசூல் சுத்தமாக கிடைக்காது என படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    புதிய முடிவு

    புதிய முடிவு

    மோகன்லால் படத்திற்கு அரபு நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால், படக்குழு அதிரடியாக முடிவெடுத்துள்ளனர். அதாவது சர்ச்சைக்குரிய தன்பாலின ஈர்ப்பாளர்கள் வரும் காட்சிகளை நீக்கிவிட்டு அரபு நாடுகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஆனாலும், குறுகிய காலத்தில் எடிட்டிங் செய்ய முடியாது என்பதால், இந்தியாவில் வெளியான பின்னர் ஓரிரு நாட்கள் தாமதமாக அரபு நாடுகளில் வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றனர். விரைவில் எடிட்டிங் முடித்துவிட்டு, திரும்பவும் அரபு நாடுகளில் சென்சாருக்கு அனுப்பவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், மோகன்லால் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

    English summary
    Malayalam actor Mohanlal starrer 'Monster' film will hit the theaters on 21st. Directed by Vysakh, this film is produced by Antony Perumbavoor. It has been reported that Arab countries have banned the release of the film Monster because of its depiction of LGBTQ content.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X