»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

லவ் சேனல் படக்குழுவினர் சென்ற வேன் விபத்தில் சிக்கியதில் நடிகை மோனிஷா, டைரக்டர் குமரேசன் உள்ளிட்டபலர் காயமடைந்தனர்.

லவ் சேனல் படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வந்தது. இதற்காக 6 பேர் கொண்டபடப்பிடிப்புக் குழுவினர் டெம்போ வேனில் ஊட்டிக்குப் புறப்பட்டனர்.

வேனை தென்காசியைச் சேர்ந்த மாரியப்பன் ஓட்டினார். இவர்களது வேன் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்து கொண்டிருந்தது.

அப்போது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற வேன் டிரைவர் மாரியப்பன் வேகமாக வளைத்துஓட்டினார். ஆனால் எதிர்புறத்தில் வேறொரு வாகனம் வரவே வேனை வலதுபுறமாக திருப்பினார். இதில் வேன்நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது மோதியது.

வேனில் இருந்த மோனிஷா, அவரது தந்தை மாருதி ராஜ், டைரக்டர் குமரேசன், வேன் டிரைவர் மாரியப்பன்உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டனர்.

Read more about: actress, cinema, injure, love channel, monisha, ooty
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil