பிக் பாஸ் வீட்டுக்குள் இப்படியொரு வைல்டு கார்டா? அவரோட என்ட்ரியை பார்த்து ஆடிப்போன ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: பிக் பாஸ் வீட்டுக்குள் புதிய விருந்தாளி ஒருவர் வந்து சென்றது ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களையும் திகைப்பில் ஆழ்த்தியது.

அதே போல பிக் பாஸ் அல்டிமேட் ரசிகர்களுக்கு அவருடைய என்ட்ரி வேறமாறி என்டர்டெயின்மென்ட்டை கொடுத்துள்ளது.

இதுவரை இப்படி நடந்ததா? என்று தெரியாத நிலையில், இந்த அனுபவம் பிக் பாஸ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

வைல்டு கார்டு என்ட்ரியாக ஓவியா உள்ளே வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இப்படியொரு ட்விஸ்ட் எதிர்பார்க்காத ஒன்று தான்.

ஓவியா வருவார்

ஓவியா வருவார்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்டு கார்டாக இந்த வாரம் ஓவியா உள்ளே நுழைவார் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ஓவியாவுக்கு பதில் இன்னொரு சிறப்பான நபர் பிக் பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டுக்குள் குரங்கு

பிக் பாஸ் வீட்டுக்குள் குரங்கு

பூந்தமல்லி அருகே உள்ள இவிபி பிலிம் சிட்டியில் தான் பிக் பாஸ் அல்டிமேட் செட் இருக்கிறது. இந்நிலையில், அந்த செட்டிற்குள் திடீரென குரங்கு ஒன்று இளைப்பார வந்ததை பார்த்த பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த நிலையை அடைந்தனர்.

போலீஸ் ஸ்டேஷன் செட்

போலீஸ் ஸ்டேஷன் செட்

பிபி போலீஸ் ஸ்டேஷன் என இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்கிற்காக பிக் பாஸ் வீடு காவல் நிலையமாக ஒரு பகுதி மாற்றப்பட்டுள்ள நிலையில், அந்த காவல் நிலைய செட்டுக்கு மேல் அழகாக குரங்கு ஒன்று இறங்கி வீட்டிற்குள் வந்து சுற்றிப் பார்த்ததை பார்த்து ஹவுஸ்மேட்கள் வியந்து பார்த்தனர்.

Recommended Video

Bigg Boss Ultimate-ல் Abhishek Raja WILDCARD Entry | BB Ultimate Tamil
தண்ணீர் தேடி வந்திருக்குமா

தண்ணீர் தேடி வந்திருக்குமா

வெயில் இப்பவே சற்று அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், குளிர்ச்சியாகவும் பசுமையாகவும் இருக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் தண்ணீர் தேடி அந்த குரங்கு வந்து சென்றிருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டு சுவரில் காகங்கள், வித விதமான பறவைகள் அமர்ந்து சென்றதை எல்லாம் ஏற்கனவே பார்த்த நிலையில், குரங்கு ஒன்று அழகாக வந்து எந்தவொரு தொல்லையும் கொடுக்காமல் சென்றது அல்டிமேட்டான விஷயமாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X