twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இனி உதவி இயக்குநர்களுக்கு மாதச் சம்பளம்... ரூ 40 ஆயிரம் வரை கிடைக்க இயக்குநர் சங்கம் முயற்சி!

    By Shankar
    |

    சென்னை: நிலையற்ற வாழ்க்கை, தொழில் என்று புலம்பிக் கொண்டிருக்கும் உதவி இயக்குநர்களுக்கு இனி மாதந்தோறும் சம்பளம் கிடைக்க இயக்குநர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் முயற்சி மேற் கொண்டுள்ளனர்.

    சமீபத்தில் நடந்த இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவராக இயக்குநர் விக்ரமன் தேர்வு பெற்றார். அவர் தலைமையில் புதிய நிர்வாகிகள் கடந்த மாதம் பதவியேற்றனர். அவர்கள் பொறுப்பேற்று 30 நாட்கள் ஆவதையொட்டி சென்னையில் பத்திரிகையாளர்களை நேற்று மாலை சந்தித்தனர்.

    இதில் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வி.சேகர், நிர்வாகிகள் சண்முக சுந்தரம், ராமதாஸ், டி.பி.கஜேந்திரன், மதுமிதா, ரவி மரியா ஆகியோர் கலந்துகொண்டனர். புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் இந்த 30 நாளில் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.

    உதவி இயக்குநர்களுடனும் ஒப்பந்தம்

    உதவி இயக்குநர்களுடனும் ஒப்பந்தம்

    சங்கத்தின் செயல்பாடு குறித்து தலைவர் விக்ரமன் கூறுகையில், "தமிழ் சினிமாவில் உதவி இயக்குனர்களுக்கு சரியான சம்பளம் மற்றும் அங்கீகாரம் இல்லை என்பது பெரும் குறை.

    அந்த குறையை போக்கும் வகையில், இனி வரும் காலங்களில் அவர்களுக்கு நிலையான சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, சம்பளம் தொடர்பாக உதவி இயக்குனர்களுடனும் தயாரிப்பாளர்கள் இனி ஒப்பந்தம் போட்டபின்னர் தான் படம் எடுக்க வேண்டும்.

    பட்ஜெட்டுக்கு தக்க சம்பளம்

    பட்ஜெட்டுக்கு தக்க சம்பளம்

    இதற்கான சம்பள வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரையிலான படங்களுக்கு ஒரு சம்பளமும், ஒரு கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை உள்ள படங்களுக்கு ஒரு சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டு, அதற்காக தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உதவி இயக்குனர்களுக்கு இது மிகவும் கவுரவமான சம்பளமாக இருக்கும்.

    இவ்வாறு உதவி இயக்குனர்களுடன் தயாரிப்பாளர்கள் செய்துகொள்ளும் சம்பள ஒப்பந்தம் 6 மாதம் வரை மட்டுமே செல்லுபடியாகும். இந்த ஆறு மாதங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை 6 ஆக பிரித்து மாதந்தோறும் கொடுக்க வேண்டும். இதனால் உதவி இயக்குனர்கள், அதிகாரிகளைப் போன்று சம்பளம் பெறுவார்கள். ஒரு நடுத்தர பட்ஜெட் படத்தில் பணியாற்றும் உதவி இயக்குநர் குறைந்தது ரூ 40 ஆயிரம் வரை பெற முடியும்.

    5 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டுக்கு...

    5 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டுக்கு...

    5 கோடிக்கும் அதிகமான பெரிய பட்ஜெட் படங்களுக்கான சம்பளம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. தயாரிப்பாளர் சங்க தலைவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டபிறகு அது பற்றி முடிவு செய்யப்படும்.

    பிரபலங்கள் டாட் காம்

    பிரபலங்கள் டாட் காம்

    இதுதவிர திரைப்படத் துறையினருக்காக பிரத்யேகமாக ‘பிரபலங்கள் டாட் காம்‘ என்ற இணையதளத்தை ஆரம்பிக்க உள்ளோம். திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தங்களின் பயோ டேட்டாவை இந்த தளத்தில் பதிவு செய்து, தொடர்ந்து அப்டேட் செய்யலாம். யார் யாருக்கு எந்தெந்த பணிக்கு ஆட்கள் தேவையோ, அவர்கள் இந்த இணையதளத்தைப் பார்த்து தேர்வு செய்து கொள்ள முடியும்," என்றார்.

    கண் தானம்

    கண் தானம்

    செயலாளர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், "கண் பார்வை இல்லாதவர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் கண் தானம் செய்பவர்கள் மிகவும் குறைவுதான். எனவே, இயக்குனர் சங்கம் சார்பில் வருடத்திற்கு 1000 கண்களை தானம் செய்வோம். பின்னர் அந்த எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்கவும் முயற்சி செய்வோம்," என்றார்.

    English summary
    Director Vikraman, president of newly elected directors association body told that the union took steps to give monthly salary to asst directors.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X