»   »  சுசிலீக்ஸ் என்ற பெயரில் தொடர்ந்து ரிலீசாகும் ஆபாசப் படங்கள், வீடியோக்கள்! #SuchiLeaks

சுசிலீக்ஸ் என்ற பெயரில் தொடர்ந்து ரிலீசாகும் ஆபாசப் படங்கள், வீடியோக்கள்! #SuchiLeaks

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாடகி சுசித்ராவின் பெயரில் ட்விட்டரில் தொடர்ந்து ஆபாசப் படங்கள், வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இவை பிரபல நடிகர் நடிகைகளுடையது என்று கூறப்பட்டாலும், யாருடைய முகத்தையும் காட்டாமல் வெளியிட்டு வருவதால், சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

பாடகி சுசித்ரா பெயரில் ட்விட்டரில் 20-க்கும் மேற்பட்ட பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களில் 50 ஆயிரம் ஃபாலோயர்கள் வரை ஆபாசப் படங்கள் பார்க்கும் ஆவலில் குவிகிறார்கள்.

More obscene pics and videos in SuchiLeaks

கூடவே சுசித்ராவுக்கு சப்போர்ட் வேறு.

இந்தப் பக்கங்களில் தொடர்ந்து ஆபாசப் படங்களும், வீடியோக்களும் கொட்டப்பட்டு வருகின்றன. சுசித்ரா பெயரில் வரும் ஒரு பக்கத்தை ட்விட்டர் முடக்கினால், உடனே அடுத்து புதிய பக்கம் தொடங்கப்பட்டு ஆபாச ஒளிபரப்பு தொடர்கிறது.

இப்போது #SuchiLeaks என்று தட்டினால் ஏராளமான ஆபாசப் படங்களும், வீடியோக்களும் வந்து விழுகின்றன. இவற்றில் சில பிரபல நடிகைகள், நடிகர்களுடையவை என்ற குறிப்போடு வந்தாலும், அவற்றில் சம்பந்தப்பட்டவர்களின் முகங்கள் மறைக்கப்பட்டே வருகின்றன.

இந்தப் பக்கங்களை சுசித்ராதான் இயக்குகிறாரா அல்லது வேறு யாராவது சுசித்ரா பெயரில் வேலை காட்டுகிறார்களா என்ற குழப்பம் நிலவுகிறது. விரைவில் சைபர் க்ரைம் பிரிவினர் இந்த விவகாரத்தைக் கையில் எடுப்பார்கள் என்று தெரிகிறது. அப்போது இந்த ஆபாசப் பட ஒளிபரப்பாளர் யார் என்பது தெரிந்துவிடும்.

English summary
Lot of obscene pics and videos are uploading in twitter pages in the name of Singer Suchithra.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil