For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோழி மிதித்து குஞ்சு முடமாகாது என்ற பழமொழியே பொய்-சுரேஷ் சந்திரா

|
Ajith's Manager mother passed away

சென்னை: கோழி மிதித்து குஞ்சு முடமாகாது என்ற பழமொழியே பொய். எந்த தாய் கோழியும் குஞ்சு கோழியை மிதிக்காது.... குஞ்சு மிதித்து மனதால் முடமான கோழிகளே அதிகம். முடமானாலும் மன்னிக்க தெரிந்த தெய்வம் தாய். என் தாய் கோழி என்று சுரேஷ் சந்திரா நேற்று மறைந்த தனது தாயாரைப் பற்றி நினைவு கூர்ந்துள்ளார்.

எம்.ஜி.ஆர் ரசிகனான சுரேஷ் சந்திரா, நீண்ட காலம் நடிகர் அஜித்துடைய மானேஜராக இருக்கிறார். அவருடைய தாயார் நேற்று காலமானார். அஜித் உள்பட பல திரையுலக பிரபலங்கள் வந்து பார்த்தனர்.

Mother is the goddess who knows how to forgive-Suresh Chandra

சுரேஷ் சந்திரா தனது அம்மாவை பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அம்மா... இந்த ஒற்றை வார்த்தை ஒரு அகராதிக்கு சமம். பன்மொழி வித்தகரான என் அம்மா சத்யா அந்த அகராதிக்கு சவால் விடும் தன்மை பெற்றவர். முதுமையில் கூட அயராது கற்பவர். கற்றுக் கொடுப்பதை தொழிலாக கொண்டவர். ஓய்வு பெற்று 20 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட, தனது மாணவர்களோடு கடைசி வரை தொடர்பில் இருந்தவர்.

Mother is the goddess who knows how to forgive-Suresh Chandra

மாணவர்களின் பிறந்த நாளன்று மறக்காமல், அவர்களுக்கு அலை பேசி மூலமாகவோ, முக நூல் மூலமாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ வாழ்த்து சொல்வதை வாடிக்கையாக கொண்டவர். அவர்கள் அதற்கு நன்றி கூறி குறுந்செய்தி அனுப்பினால் கூட ஒரு குழந்தையின் குதூகலத்துடன் எங்களுடன் பங்கிட்டுக் கொள்வார்.

பெண்கள் யாரையும் சார்ந்திருக்க கூடாது என்பதை, எழுபதுகளின் ஆரம்பத்தில் இவர் கூற கேட்கும் போது இவர் எனக்கு ஒரு பெண்ணியவாதியாக தெரிந்தார். திருமணமாகி மூன்று பிள்ளைகள் பெற்ற பின்னரும் மேற்படிப்பு கல்வி பயின்ற இவரது செயல் திருமணம் பேச்சு எடுத்து விட்டாலே படிப்புக்கு முழுக்கு போடும் இன்றைய இளம் பிள்ளைகளுக்கு இவரது கல்வி வேட்கை ஒரு முன்னுதாரணம்.

பக்தி பழமையான இவரிடம் இருக்கும் முற்போக்கான சிந்தனைகள் எனக்கு முரண்பாடாகவே தெரிந்தது. ஆயினும் அதை நியாயப்படுத்தும் செய்கைகள் இவருடையது. நுனி நாக்கில் ஆங்கிலம் கரை புரண்டு ஓடினாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, இந்தி, பிரெஞ்ச், ஜெர்மன், படுகா, பார்சி ஆகிய மொழிகளில் சரளமாக உரையாடுவார்.

கம்பளி ஆடை பின்னுதல், வரைதல், கோலம் போடுதல், பூஜை அறை அலங்கார அமைப்பு, எனக்கு மதிய உணவு தயார் செய்தல், தோட்டம் புணரமைத்தல், நான் வளர்க்கும் விலங்குகளுக்கு உணவு மற்றும் மருந்து கொடுக்கும் நிர்வாகம் என்று அசராமல், அயராமல் உழைக்கும் இந்த பெண்மணிக்கு, எனக்கு சுவாசம் தந்த இந்த மேகத்துக்கு ஜூன் மாதம் 6ஆம் தேதி பிறந்த நாள். சமீபத்தில் பிறந்த நாளை முடித்து விட்டு, இப்படி எங்களை விட்டு செல்வார் என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாக தான் உள்ளது.

கடந்த சில மாதங்களாக வயோதிகம் மற்றும் உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நலிவுற்று இருந்தார். நான், என் மனைவி, என் அம்மா என்று ஒரு சின்னஞ்சிறு கூட்டுக்குள் வாழும் குருவிகளாக பாடி திரிந்த நாங்கள் தூக்கமின்றி, மன அமைதியின்றி தவித்தோம். தொலைக்காட்சி பார்ப்பதில், அதிலும் சேனல் மாற்றுவதில் எங்களுக்குள் கடுமையான சண்டை கூட வரும்.

நோயின் அயர்ச்சி அவரை தொலைக்காட்சி பார்க்க விடுவது இல்லை. சண்டை போட்டு வாங்காத ரிமோட் மீது எனக்கும் ஆர்வம் இல்லை. தான் ஒரு தொலைக்காட்சி என்பதை எங்கள் வீட்டு தொலைக்காட்சி மறந்து மாதங்கள் மூன்றாகி விட்டது. எனக்கு திருமண பந்தத்தின் மீது இருந்த அச்சமே மாமியார் மருமகள் உரசல் தான். அந்த உணர்வு எனக்கு இல்லாமல் செய்த என் தாய்க்கும், என் மனைவிக்கும் கோடானு கோடி நன்றி.

தனக்கு நேர்ந்தது தன் மருமகளுக்கு நேரக் கூடாதுன்னு இந்த அம்மா என் மனைவிக்கு ஒரு மாற்று தாயாகவே இருக்கிறார், இருக்க போகிறார் வானில் இருந்து. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் போது யாரோ ஒருவரை சந்திக்கலாம் என அனுமதிக்கப்பட்டபோது கூட அவர் நாடியது என் மனைவியின் அருகாமையைத் தான்.

படிப்பறிவற்ற நான் ஒரு பிள்ளையாக, சிறந்த ஆசிரியை ஆக திகழ்ந்த அவருக்கு பெருமை சேர்க்க வில்லை. இன்றும் சமூகத்தில் நான் ஈன்று இருக்கும் கொஞ்சம் நஞ்சம் நற்பண்புகளும் அதை ஒட்டி வரும் நற்பெயரும் அவருக்கு பெருமை சேர்க்கும் என்பதில் எனக்கு அலாதி பெருமை.

எம்.ஜி.ஆர் பாடல்கள் நித்தம் கேட்கும் எனக்கு அடிமை பெண் படத்தில் வரும் தாயில்லாமல் நானில்லை பாடலில் வரும் தன்மை இல்லாமல் நான் மிதித்தாலும் தாய்மையிலே மனம் குளிர்ந்திடுவாள், என்ற வரிகள் என் தாயை நினைவூட்டும். கோழி மிதித்து குஞ்சு முடமாகாது என்ற பழமொழியே பொய். எந்த தாய் கோழியும் குஞ்சு கோழியை மிதிக்காது.... குஞ்சு மிதித்து மனதால் முடமான கோழிகளே அதிகம்.

முடமானாலும் மன்னிக்க தெரிந்த தெய்வம் தாய். என் தாய் கோழி என் பொறுமையின்மையை, கோபத்தை கையாள தெரிந்தவள். என் உளறல்களுக்கு செவி தானம் கொடுத்தவள்... என் கிறுக்கல்களுக்கு கூட அவரிடம் பாராட்டு கிடைக்கும். மனோதிடம் அதிகம் பெற்ற அவருக்கு உடல் பலம் குறைந்து விட்டது. மீண்டும் நடமாடுவார், என்னுடன் இரவு உணவு உண்ணும் போது என் சுக துக்கங்களை கேட்பார், காலையில் நான் வேலைக்கு புறப்படும் போது தான்.

English summary
Mother is the goddess who knows how to forgive even though crippled. Suresh Chandra remembers his mother who passed away yesterday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more