»   »  மக்கள் சூப்பர் ஸ்டார் விவகாரம்... 'என்னை மன்னிச்சிருங்க!' - மொட்ட சிவா கெட்ட சிவா இயக்குநர்

மக்கள் சூப்பர் ஸ்டார் விவகாரம்... 'என்னை மன்னிச்சிருங்க!' - மொட்ட சிவா கெட்ட சிவா இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற படத்தை ராகவா லாரன்ஸுக்கு நானாகத்தான் போட்டேன். அதற்காக இப்போது மன்னிப்புக் கோருகிறேன் என்று மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் இயக்குநர் சாய் ரமணி கூறியுள்ளார்.

மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டப் பெயரைப் பயன்படுத்தியதற்காக லாரன்ஸ் மற்றும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் இயக்குநர் சாய் ரமணிக்கு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி கிளம்பியுள்ளது. கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளனர் இருவரும். படத்தின் விளம்பரத்துக்காக இதை தெரிந்தே செய்திருக்கிறார்கள் என்ற பேச்சு பரவலாக உள்ளது.

Motta Siva Ketta Siva director seeks apology for using Makkal Superstar

இந்த நிலையில் அந்தப் பட்டம் எனக்கு வேண்டாம் என ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். இயக்குநர் சாய் ரமணி தனது செயலுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ராகவா லாரன்ஸுக்கு இன்ப அதிர்ச்சி தர வேண்டும் என்று நினைத்து மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் பயன்படுத்தி இருந்தேன். எங்கள் அன்பின் வெளிப்பாடாக அளித்த இந்தப் பட்டம் அவரை ஆச்சர்யப்பட வைக்கவில்லை. என்னைக் கூப்பிட்டுக் கண்டித்ததோடு, ஊடக, பத்திரிகை நண்பர்களை அழைத்து உலக சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான் என்றும், எனக்கு இந்தப் பட்டம் வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

படத்தில் வரும் அந்தப் பட்டப் பெயரை நீக்குவதற்கான கால அவகாசத்தை கருத்தில் கொண்டு, மன்னித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.

English summary
Sai Ramani, the director of Motta Siva Ketta Siva is seeking apology for using the word Makkal Superstar to Lawrence.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil