»   »  மே இறுதியில் மொட்ட சிவா கெட்ட சிவா!

மே இறுதியில் மொட்ட சிவா கெட்ட சிவா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாரன்ஸ் நடித்து வரும் மொட்ட சிவா கெட்ட சிவா படம் வரும் மே மாதம் பிரமாண்டமாக வெளியாகிறது.

'காஞ்சனா 2' படத்திற்கு பிறகு லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா'. இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வேந்தர் மூவிஸ் நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.


Motta Siva Ketta Siva to release in May

இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நிக்கில் கல்ராணி ஹீரோயினாக நடித்து வருகிறார். சாய் ரமணி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.


இன்னும் நான்கு பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பாடல் காட்சி படமாக்கம் முடிந்ததும், வருகிற மே மாதத்தில் வெளியிட படக் குழுவினர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இப்படத்தில் லாரன்ஸ் மொட்டை தலையுடன் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துவருகிறார். மேலும், போலீஸ் அதிகாரியாகவும் இப்படத்தில் நடிக்கிறார்.

English summary
Raghava Lawrence's Motta Siva Ketta Siva will be hits screens worldwide in coming May.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil