»   »  அட்லீ விஜய்யுடன் இணையும் மொட்டை ராஜேந்திரன்!

அட்லீ விஜய்யுடன் இணையும் மொட்டை ராஜேந்திரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போதெல்லாம் மொட்டை ராஜேந்திரன் இல்லாத படங்களே இல்லை என்றாகிவிட்டது. வில்லனாக இருந்தவர், இப்போது முழு நேர காமெடியனாகிவிட்டார்.

கவுண்டமணியிடம் குட்டு வாங்கியதன் மூலம், இன்றைய நகைச்சுவை நடிகர்கள் பலருக்கும் கிடைக்காத வாய்ப்பையும் பெற்றுவிட்டார்.

இப்போது அட்லீ இயக்கும் படத்தில் விஜய்யுடன் காமெடி செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

Mottai Rajendiran joins with Vijay

அட்லீ இயக்கும் புதிய படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருடன் நான் கடவுள் ராஜேந்திரனும் போலீசாக நடிக்கிறார். அதாவது போலீஸ் அதிகாரி விஜய்க்கு கார் ட்ரைவர் வேடம் இவருக்கு.

விஜய் - ராஜேந்திரன் கூட்டணியில் வித்தியாசமான நகைச்சுவைக் காட்சிகளை நீங்கள் எதிர்ப்பார்க்கலாம் என்கிறார் இயக்குநர்.

English summary
Mottai Rajendiran has joined with Vijay in Atlee directed new movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil