twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா பாதிப்பு.. மக்களுக்கு உதவுவதற்காக.. மருத்துவத்துறைக்கு மீண்டும் திரும்பிய சினிமா இயக்குனர்!

    By
    |

    கொல்கத்தா: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மருத்துவத்துறைக்குத் திரும்பி இருக்கிறார் சினிமா இயக்குனர் ஒருவர்.

    Recommended Video

    ஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்- வீடியோ

    கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 2,93,754 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா, 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    பிரபல சினிமா இயக்குனருக்கு திருமண நிச்சயதார்த்தம்.. காதலியை கரம் பிடிக்கிறார்.. நடிகர்கள் வாழ்த்து! பிரபல சினிமா இயக்குனருக்கு திருமண நிச்சயதார்த்தம்.. காதலியை கரம் பிடிக்கிறார்.. நடிகர்கள் வாழ்த்து!

    மருத்துவத் துறை

    மருத்துவத் துறை

    இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக, மருத்துவத்தை விட்டுவிட்டு சினிமாவுக்கு சென்ற மருத்துவர், 14 வருடங்களுக்குப் பிறகு, மக்களுக்கு உதவுவதற்காக மீண்டும் மருத்துவத் துறைக்குத் திரும்பி உள்ளார்.

    கமலேஷ்வர் முகர்ஜி

    கமலேஷ்வர் முகர்ஜி

    பிரபல வங்காள மொழி திரைப்பட இயக்குனர் கமலேஷ்வர் முகர்ஜி. சில படங்களில் நடித்தும் உள்ளார். கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படித்த இவர், பின்னர் மருத்துவமனை ஒன்றில் பணியற்றினார். அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ள இவர், சினிமா ஆசை காரணமாக கடந்த 14 வருடத்துக்கு முன் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டார்.

    வாழ்க்கை கதை

    வாழ்க்கை கதை

    பின்னர் விளம்பர படங்களை இயக்கினார். நோடோபோர் நாட் அவுட் என்ற படத்துக்கு திரைக்கதை எழுதினார். பின்னர் உரோ சித்தி என்ற படம் மூலம் இயக்குனர் ஆனார். தொடர்ந்து, மேஹே தாகா தாரா, சந்தர் பார் ஆகிய படங்களை இயக்கினார். பெங்காலி இயக்குனர் ரிதிவித் கடக் என்பவரது வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மேஹே தாகா தாரா படம், சில விருதுகளையும் பெற்றது.

    மேற்கு வங்கம்

    மேற்கு வங்கம்

    மேலும் அமேசான் ஓபிஜான், பாஸ்வேட் உட்பட சில படங்களை இயக்கியுள்ள அவர், சில படங்களில் நடித்தும் உள்ளார். இவர் 14 வருடங்களுக்கு பிறகு சினிமாவை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, மருத்துவத்துறைக்கு மீண்டும் திரும்பியுள்ளார். கொரோனா மற்றும் அம்பான் புயலால் மேற்கு வங்கத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கிராமங்களில் உள்ள மக்களுக்கு, மேற்கு வங்க மருத்துவ அமைப்பு, மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. இதில் இவரும் பங்கேற்று சிகிச்சை அளித்து வருகிறார்.

    செலுத்தவில்லை

    செலுத்தவில்லை

    'நான் சினிமாவில் இருந்ததால் மருத்துவத்துறையில் கவனம் செலுத்தவில்லை. ஆனால், இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில், அதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால் மக்களுக்கு உதவுவதற்காக மீண்டும் இந்தத் துறைக்கு வந்திருக்கிறேன்' என்று கூறியிருக்கிறார், இயக்குனர் கமலேஷ்வர் முகர்ஜி.

    English summary
    Movie director Kamaleshwar Mukherjee back to medical Profession after 14 years.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X