ஃபேன்ஸ் ரெடியா...சிம்பு பிறந்தநாளைக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கு
சென்னை : சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக பல மாஸான விஷயங்களை வெளியிட போகிறார்களாம். இது பற்றிய தகவல் வெளியானதால் சிம்பு ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.
சிம்பு நடித்த மாநாடு படம் நவம்பர் மாதம் வெளியாகி மாஸ் ஹிட்டாகி உள்ளது. 100 கோடியை தாண்டி தொடர்ந்து வசூலை அள்ளி குவித்து வரும் மாநாடு படம் விரைவில் 75வது நாளை எட்ட உள்ளது. இதனால் ஸ்பெஷலாக கொண்டாட மாநாடு படக்குழு தயாராகி வருகிறது. அன்றைய தினம் மாநாடு இதுவரை வசூலித்த மொத்த தொகை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்
இந்நிலையில் சிம்பு தனது 39 வது பிறந்த நாளை பிப்ரவரி 3 ம் தேதி கொண்டாட உள்ளார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக பல முக்கிய அறிவிப்புக்களை வெளியிட இவர் நடித்து வரும் படங்களின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த தகவல் சிம்பு ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

முதல் ட்ரீட் இது தான்
லேட்டஸ்ட் தகவலின் படி முதல் ட்ரீட்டாக, சிம்பு அடுத்து நடிக்க உள்ள பத்து தல படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட போகிறார்களாம். சிம்பு பிறந்தநாளை கொண்டாடும் விதமாக புதிய லுக்கில் தோன்றும் சிம்புவின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது. ஒபிலி என் கிருஷ்ணா இயக்கி வரும் பத்து தல படம் கன்னட படமான முஃப்தி படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானிசங்கர் நடிக்கிறார்கள்.

அப்போ 2வது ட்ரீட்
இரண்டாவது ட்ரீட்டாக, கெளதம் மேனன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபஸ்ட் சிங்கிளை வெளியிட போகிறார்களாம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் சூப்பரான பாடல் ஃபஸ்ட்சிங்கிளாக வெளியிடப்பட உள்ளதாம். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக சித்தி இட்னானி நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் மிக முக்கியமான ரோல்களில் நடித்துள்ளனர்.

ட்விட்டரை தெறிக்க விடும் ரசிகர்கள்
வெந்து தணிந்தது காடு படம் ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும், இந்த படத்தில் சிம்பு 5 கெட்அப்களில் நடித்துள்ளதாகவும் சமீபத்திய பேட்டியில் தயாரிப்பாளர் ஐசரி கணேசனே கூறி இருந்தார். இதை வைத்தே அப்டேட்டே இல்லாமல் #Silambarasan என்ற ஹேஷ்டேக்கை அவரின் ரசிகர்கள் அடிக்கடி டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். இந்த நிலையில் சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷல் பிளானை எப்படி எல்லாம் கொண்டாட போகிறார்களோ.
Recommended Video

அட இதெல்லாம் சொல்லவே இல்ல
ஐசரி கணேசனின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தை முடித்ததும், கொரோனா குமார் படத்திலும் சிம்பு நடிக்க போகிறார். இந்த படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2013 ம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் அடுத்த பாகமாக எடுக்கப்பட உள்ள கொரோனா குமார் படத்தை கோகுல் எழுதி, இயக்குகிறார். டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க போகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியும் கெஸ்ட் ரோல் செய்ய போவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications