»   »  அபியும் நானும், தெய்வதிருமகள், வாரணம் ஆயிரம்... அப்பாக்களைக் கொண்டாடிய தமிழ் சினிமாக்கள்!

அபியும் நானும், தெய்வதிருமகள், வாரணம் ஆயிரம்... அப்பாக்களைக் கொண்டாடிய தமிழ் சினிமாக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் அம்மா செண்டிமெண்ட் கொஞ்சம் தூக்கல் தான். ஆனால், சில படங்கள் அப்பாவின் பாசத்தைப் பற்றியும் பேசியுள்ளன.

உலக தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில், அப்படியாக அப்பாவின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிய சில படங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

இவை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...

அன்புள்ள அப்பா...

அன்புள்ள அப்பா...

சிவாஜியும், நதியாவும் அப்பாவும், மகளுமாக நடித்திருந்த படம் இது. அப்பா, மகளுக்கு இடையேயான அன்பை அழகாகச் சொன்ன படங்களில் இதுவும் ஒன்று.

அபியும் நானும்...

அபியும் நானும்...

ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், திரிஷா நடித்திருந்த படம் இது. மகளின் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்தில் தந்தையின் உணர்ச்சிகளைப் பேசிய படம்.

தெய்வதிருமகள்...

தெய்வதிருமகள்...

விஜய் இயக்கத்தில் விக்ரம் மாறுபட்ட வேடத்தில் நடித்த படம். சிறுமி சாரா இப்படத்தில் அருமையான மகளாக நடித்திருந்தார்.

வாரணம் ஆயிரம்...

வாரணம் ஆயிரம்...

அப்பா, மகள் பாசம் பற்றி மட்டுமே பெரும்பாலான படங்கள் பேசிக் கொண்டிருக்க, வித்தியாசமான அப்பாவிற்கும், மகனுக்கும் இடையேயான பாசத்தைப் பற்றி பேசிய படம் இது. இதில், அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களிலும் சூர்யாவே நடித்திருந்தார்.

சந்தோஷ் சுப்ரமணியம்...

சந்தோஷ் சுப்ரமணியம்...

இதுவும் அப்பா, மகன் பாசத்தைப் பற்றிய படம் தான். ஆனால், அவர்களுக்கு இடையேயுள்ள பிரச்சினைகளைப் பற்றி அழகாக பேசியது இப்படம்.

தங்கமீன்கள்...

தங்கமீன்கள்...

தன் மகளின் சின்னச்சின்ன ஆசைகளை நிறைவேற்றுவதற்காக ஒரு தந்தை எப்படிப்பட்ட கஷ்டங்களை எதிர்கொள்கிறார் என்பதைப் பற்றி பேசிய படம்.

English summary
These are some movies that had father's sentiment as major story line.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil