»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:நடிகை வனிதாவுக்கும், டி.வி.நடிகர் ஆனந்த்துக்கும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் திருமணம் நடந்தது.

நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளா தம்பதியரின் மூத்த மகள் வனிதா. இவர் சந்திரலேகா, மாணிக்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஒரு டிவி தொடரில் ஆனந்த் என்பவருடன் நடித்துக் கொண்டிருந்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. காதலுக்கு சம்மதம் கிடைத்தது. இதையடுத்துசென்னை வளசரவாக்கத்தில் உள்ள விஜயகுமாரின் வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது.

திருமணத்தில் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தியம்மாள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம்.சரவணன், கே.ராஜன், கே.ராஜகோபால்,இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோர் வந்து வாழ்த்துக் கூறினார்கள்.

நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரும் நடிகைகள் லதா, குஷ்பு, மீனா, ரம்பா, தேவயானி, ரோஜா இயக்குநர்கள் பாலச்சந்தர்,பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி., ஆர்.சி.சக்தி ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்துக் கூறினர்.

திருமணத்துக்கு வந்தவர்களை நடிகர் விஜயகுமார், அவரது மனைவிகள் முத்துக்கண்ணு, மஞ்சுளா, மகன் அருண்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil