தயாரிப்பாளராகிறாரா தோனி?... நயன்தாராவை வைத்து படம் எடுக்கிறாரா?...உண்மை என்ன?...புதிய தகவல்

சென்னை : கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தமிழ் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக வெளியான தகவல் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகி உள்ளது.

MS Dhoni released a statement dismissing rumours about them helming Tamil movie.

தமிழகத்தில் விஜய் மற்றும் அஜீத் ஆகியோருக்கு எந்த அளவுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ அதே அளவுக்கு மகேந்திர சிங் தோனிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் இவரை 'தல' தோனி என்று செல்லமாக அழைப்பார்கள்

கடந்த இரண்டு தினங்களாக சோஷியல் மீடியாவில், எம்.எஸ்.தோனி திரைப்பட தயாரிப்பில் ஈடுபட உள்ளதாகவும். அதற்காக தனி தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. மேலும், எம் எஸ்.தோனி தமிழில் புதிய திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், நடிகர் ரஜினிகாந்திடம் முக்கிய உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவர் எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்துள்ளதாகவும்.

MS Dhoni released a statement dismissing rumours about them helming Tamil movie.

பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள முதல் படத்தில், கதாநாயகியாக நடிப்பதற்காக நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்பட்டது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ளது எனவும் செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக காட்டுத்தீ போல பரவின. பலரும்,தோனி ஏன் திடீரென சினிமாவில் நுழையும் முடிவை எடுத்துள்ளார் என்றும் கருத்துக்கள் இணையத்தில் வலம் வந்தன.

இந்நிலையில் இந்த தகவல் குறித்து தோனி எண்டர்டெயிண்மண்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தோனி தற்போது வரை சஞ்சய் என்ற எந்தவொரு நபருடனும் இணைந்து பணிபுரியவில்லை. தமிழில் திரைப்படம் தயாரிப்பதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யான வதந்திகள் எனவும், தோனி எண்டர்டெயிண்ட்மண்ட் மற்ற பணிகளில் தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X